AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மோகன்லால் முதல் டொவினோ தாமஸ் வரை… கேரளா தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபல நடிகர்கள்

Mohanlal to Tovino Thomas actors in Kerala cast ballots list: நாடு முழுவதும் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்று வருகின்றது. அந்த வரிசையில் கேரளாவில் இன்று நடைபெறும் தேர்தலில் மக்கள் மற்றும் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.

மோகன்லால் முதல் டொவினோ தாமஸ் வரை… கேரளா தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபல நடிகர்கள்
நடிகர்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Apr 2026 13:42 PM IST

இந்தியா முழுவதும் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று 09-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் நடைப்பெற்று வருகின்றது. காலை முதல் வரிசையில் நின்று பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் தனக்களது வாக்கை செலுத்தி ஜன நாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றது. புதுச்சேரி மற்றும் கேரளாவை ஒப்பிடும் போது கேரளா பெரிய மாநிலமாக உள்ளது. இங்கு வாக்குப்பதிவும் அதிக அளவில் நடைப்பெற்று வருகின்றது. கேரளாவைப் பொருத்தவரை இரண்டு மிகப்பெரிய கட்சிகளாக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்தில் உருவாகும் படங்களில் கூட அதிக அளவில் இந்த இரண்டு கட்சிகள் தான் காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் ஒப்பிடும் போது கல்வியில் சிறந்த மாநிலமாக கேரளா திகழ்வது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மலையாள சினிமாவும் பான் இந்திய அளவில் மக்களிடையே பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். படங்களில் நடிப்பது மட்டும் இன்றி சமூகம் சார்ந்த விசயங்களிலும் தொடர்ந்து அக்கரை காட்டி வருகின்றனர் திரையுலக பிரபலங்கள்.

கேரளா தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபல நடிகர்கள்:

இந்த நிலையில் இன்று கேளாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை செலுத்து ஜன நாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர் நடிகர்கள். அந்த வரிசையில் மூத்த நடிகரான மோகன்லால் காலையிலேயே தனது வாக்கினை செலுத்துவிட்டு புகைப்படத்துடன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நான் என்னுடையை கடமையை செய்துவிட்டேன். நீங்க இனி செய்யனு, அனைவரும் ஓட்டு போடுங்க என்று தெரிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களாக உள்ள மம்முட்டி, பிரித்விராஜ் சுகுமாரன், ஆசிஃப் அலி, டொவினோ தாமஸ், மமிதா பைஜூ மற்றும் அஹானா உட்பட பல நடிகர்கள் தொடர்ந்து தங்களது வாக்கை செலுத்தி ஜன நாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தெலுங்கு சினிமா நடிகரை இயக்க தயாராகும் அபிஷன் ஜீவிந்த்? வைரலாகும் தகவல்

நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடியில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற டாணாக்காரன் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது

Follow Us