AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தெலுங்கு சினிமா நடிகரை இயக்க தயாராகும் அபிஷன் ஜீவிந்த்? வைரலாகும் தகவல்

Abishan Jeevinth Will Be Direct Actor Vijay Devarakonda: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி பிரபலம் ஆனதைப் போல நடிகராகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற அபிஷன் ஜீவிந்த் தற்போது மீண்டும் படத்தை இயக்கும் பணிகளில் பிசியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமா நடிகரை இயக்க தயாராகும் அபிஷன் ஜீவிந்த்? வைரலாகும் தகவல்
அபிஷன் ஜீவிந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Apr 2026 16:54 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. நாட்ல இவ்வளவு நல்ல மனுஷங்க எல்லாம் இருக்காங்களா என்று கேள்வி கேட்க வைக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் அத்தனை கதாப்பாத்திரங்கள் மிகவும் அழகாக காட்டப்பட்டு இருக்கும். இந்தப் படம் தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த ஃபீல் குட் படமாக உள்ளது என்றும் ரசிகர்கள் பாராட்டி தள்ளியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அடுத்து யாரை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரே நாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி வித் லவ் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாகவும் அறிமுகம் ஆனார் அபிஷன் ஜீவிந்த்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கி இருந்த நிலையில் படத்தில் நடிகர் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து இருந்தார். அபிஷன் ஜீவிந்தின் இயக்கத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல அவர் நாயகனாக அறிமுகம் ஆன வித் லவ் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமா நடிகரை இயக்க தயாராகும் அபிஷன் ஜீவிந்த்?

இந்த நிலையில் அடுத்ததாக அபிஷன் ஜீவிந்த் இயக்க உள்ள படம் தொடர்பான அப்டேட் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக உள்ள நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு கதை கூறியதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இது அபிஷன் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் அபிஷன் ஜீவிந்த் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதை கூறியுள்ளதாகவும் அடுத்ததாக நடிகர் சூர்யாவிற்கு கதை கூற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… VJ Parvathy: அப்பா போனதும் செம கஷ்டம்.. நான் VJ-ஆனது இப்படிதான் – வி.ஜே.பார்வதி பகிர்ந்த சம்பவம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சிவகார்த்திகேயனை அடுத்து இயக்க உள்ளது இந்த இயக்குநரா? வைரலாகும் தகவல்

Follow Us