Prabhu Deva: எளிமையான கிராம வாழ்க்கையை விரும்பும் பிரபு தேவா – அவரே வெளியிட்ட வீடியோவை பாருங்க!
Prabhu Deva Simple Village Life: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடன கலைஞராகவும், நடிகராகவும் இருந்துவருபவர் பிரபு தேவா. இவர் சமீபத்தில் கிராமத்தில், எளிமையான வீடு ஒன்றில், தனது நிம்மதியான வாழ்க்கையை கழிப்பதுபோன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
நடிகர் பிரபு தேவா (Prabhu Deva) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற சினிமாவில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்துவருகிறார். நடன கலைஞர் மற்றும் நடிகர் என பல்வேறு பணிகளை செய்துவருகிறார். இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், நடன நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார். இவர் சமீபத்தில் நடத்தியிருந்த நடன கான்சட்டில் நடிகைகள் சான்வே மேகனா, ஷாயிஷா, யாஷிகா ஆனந்த் மற்றும் நடிகை ஷ்ரேயா என பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டு நடனமாடியிருந்தனர். அந்த விதத்தில் பிரபுதேவா புதிதாக மூன்வாக் (Moon Walk) திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இதை அறிமுக இயக்குநர் மனோஜ் (Manoj) இயக்க, பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இப்படமானது 2026ம் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த விதத்தில் நடிகர் பிரபு தேவாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. எளிமையான கிராமத்து வாழ்க்கையை விரும்பும் விதத்தில், சாதாரண வீடு ஒன்றில், நடிகர் பிரபு தேவா இருப்பதுபோன்ற வீடியோ வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: தளபதி விஜயின் அந்தப் படத்தை நிறையமுறை பார்த்து இருக்கேன் – நடிகர் டொவினோ தாமஸ்
நடிகர் பிரபுதேவா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:
View this post on Instagram
இந்த வீடியோவில் நடிகர் பிரபு தேவா, சாதாரணமாக வீடு கதவுகள் திறக்கப்படாத வீடு ஒன்றின் வெளியே அமர்ந்து. இளநீர் குடித்துவிட்டு, அதன் வழுக்கையை சாப்பிடுவதுபோல் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. வெறும் தரையில், எந்தவித விரிப்புகளை இல்லாமல் அமர்ந்திருந்து, சாதாரண நபரை போலவே அவர் இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விருப்புகளை இல்லாம, வெறும் தரையில் அவர் படுத்து உறங்குவது போன்றும் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தெலுங்கு சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அனகனக ஒக்க ராஜூ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
எந்தவித மின் விசிறியும் இல்லாமல், இயற்கையான காற்றிலே பிரபு தேவா உறங்கியுள்ளார். தனது கிராமத்து வாழ்க்கையை மிகவும் எளிமையாகவும், அவர் செலவழிக்கும் விதம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டுவருகிறது. இந்த வீடியோவில் கீழ் நடிகர் பிரபு தேவா, “கிராமத்து வாழ்க்கை ” என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். இவர் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துவரும் நிலையில், சமீபத்தில் கத்தனார் என்ற படத்தின் ட்ரெய்லரில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். படங்களில் நடிகனாக மட்டுமில்லாமல், முக்கிய வேடங்களிலும் நடிப்பதில் பிரபு தேவா ஆர்வம் காட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.