AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Atlee: கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்… நீளிரா திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!

Atlee Praised Neelira Movie: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் அட்லீ. இவர் தற்போது அல்லு அர்ஜூனுடன் புதிய படத்தில் பணியாற்றிவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நீளிரா படத்தை பார்த்த இவர், அந்த படத்தை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ந்துள்ளார்.

Atlee: கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்… நீளிரா திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!
நீளிரா திரைப்படத்தைப் பாராட்டிய அட்லீ Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Apr 2026 15:45 PM IST

இயக்குநர் அட்லீயின் (Director Atlee) இயக்கத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் ஷாருக்கான் (Shah Rukh Khan) வரை பல்வேறு உச்ச நடிகர்கள் இணைந்து படங்களில் நடித்துள்ளனர். இந்த வரிசையில் இவர் தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் (Allu Arjun) இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இந்த படமானது தற்காலிகமாக AA22 என அழைக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தில் அட்லீ இயக்க, அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2027ம் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இதன் ஷூட்டிங் பணிகள் தீவிரமான நடைபெற்றுவருகிறது.

இதை தொடர்ந்து மீண்டும் ஷாருக்கானுடன் புது படத்தில் இவர் இணைய வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்திறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான நீளிரா திரைப்படத்தை (Neelira Movie) பார்த்த அட்லீ, அந்த திரைப்படத்தை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: லெஜெண்ட் சரவணனின் லீடர் படத்தின் 3 நாட்கள் வசூல் இத்தனை கோடியா?- படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

நீளிரா திரைப்படத்தை பாராட்டி அட்லீ தெரிவித்த விஷயம்:

இயக்குநர் அட்லீ தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நீளிரா படமானது மிகவும் அருமையான திரைப்படம், கண்டிப்பாக அனைவரும் திரையரங்குகளில் சென்றுபார்க்கவேண்டும். தயாரிப்பாளார்கள் கார்த்திக் சுப்புராஜ், ராணா டகுபதி மிகவும் அருமையான படத்தை தயாரித்திருக்கிறீர்கள். மேலும் இயக்குநர் சோமிதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கணவருடன் பிரச்சனை… தற்கொலை செய்துகொண்ட கயல் சீரியல் நடிகை – சோகத்தில் ரசிகர்கள்

நீளிரா படத்தை அட்லீ பாராட்டியது குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

அறிமுக இயக்குநர் சோமித்திரன் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ராணாவின் தயாரிப்பில் கடந்த 2026 ஏப்ரல் 3ம் தேதியில் வெளியான படம் நீளிரா. இந்த படத்தில் நடிகர்கள் நவீன் சந்திரா, சனந்த், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர் என பல்வேறு திரை பிரபலங்கள் இணைந்தது நடித்துள்ளனர். இந்த படமானது இலங்கையில் போருக்குள் நடந்த ஒரு திருமணம் நடந்த என்ற, உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இப்படமானது முழுக்க அதிரடி ஆக்ஷன், எமோஷனல் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் போன்ற வித்தியாசமான ஜானரில் வெளியாகியுள்ளது. இந்த படமானது வெளியாகி 3 நாட்களை கடந்துள்ள நிலையில், பல்வேறு பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி பதிவுகளை வெளியிட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us