AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Leader Movie: லெஜெண்ட் சரவணனின் லீடர் படத்தின் 3 நாட்கள் வசூல் இத்தனை கோடியா?- படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

Leader Movie 3 Day Collection: நடிகராக நுழைந்து, சினிமாவின் மீது ஆர்வம் காட்டிவருபவர் அருள் சரவணன். தொழிலதிபரான இவர் நடித்திருந்த லீடர் திரைப்படமானது கடந்த 2026 ஏப்ரல் 3ம் தேதியில் வெளியாகியிருந்தது. அந்த வகையில் 3 நாட்கள் முடிவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leader Movie: லெஜெண்ட் சரவணனின் லீடர் படத்தின் 3 நாட்கள் வசூல் இத்தனை கோடியா?- படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
லெஜெண்ட் சரவணனின் லீடர் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Apr 2026 14:52 PM IST

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் துரை செந்தில்குமார் (Durai Senthilkumar). இவர் தமிழில் எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றிருக்கிறார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் புதிதாக உருவான திரைப்படம்தான் லீடர் (Leader). இதில் தமிழ் பிரபல தொழிலதிபரும், தற்போது நடிகராக இருந்துவரும் அருள் சரவணன் (Arul Saravanan) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை பாயல் ராஜ்புட் (Payal Rajput) இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தை அருள் சரவணன் தயாரித்து, நடித்திருக்கும் நிலையில், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் (Sam CS) இசையமைத்துள்ளார். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. அந்த வகையில் இந்த படமானது வெளியாகி 3 நாட்களில் மொத்தமாக எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படமானது மொத்தமாக சுமார் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளாராம். இந்த படமானது வெளியான 3 நாட்களிலே ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், விரைவில் ரூ 100 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தென்னிந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

லீடர் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவ:

இந்த லீடர் திரைப்படத்தில் அருள் சரவணன், பாயல் ராஜ்புட், ஆண்ட்ரியா, ஷாம், அம்ரிதா ஐயர் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த் படமானது குடும்ப ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் அருள் சரவணன், வன்முறையான முந்தைய காலத்தை விட்டுவிட்டு, தற்போது சாதாரணமான வாழ்க்கையை வாழ் ஆரம்பிக்கிறார். ஆனால் மீண்டும் அவரை அந்த வன்முறை விடாமல் தொடர்கிறது என்பதே இப்படத்தின் கதையாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ரீமேக் படமா இருந்தாலும் சூர்யா சார் எனக்கு கார் பரிசளித்தார் – விக்னேஷ் சிவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

கிட்டத்தட்ட விஜய்யின் லியோ படத்தில், பார்த்திபன் கதாபாத்திரத்தின் கதையை போலவே இதுவும் உள்ளது. நடிகர் அருள் சரவணன் தனது முதல் படத்தை ஒப்பிடும்போது, இப்படத்தில் நன்றாகவும், அதிக ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார். அந்த வகையில் இந்த படத்திற்கு, திரையரங்குகளில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படமானது விரைவில் ஓடிடியிலும் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us