AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: சூர்யா47 படத்திற்காக மாஸ் லுக்கில் சூர்யா – ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ!

Suriya New Mass Look Video: சூர்யா தற்போது மலையாள இயக்குநர் ஜித்துமாதவன் இயக்கத்தில் சூர்யா47 படத்தில் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அந்த படத்தில் இருக்கும் மாஸ் லுக்கில், கொச்சி விமான நிலையத்தில் சூர்யா சென்ற வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Suriya: சூர்யா47 படத்திற்காக மாஸ் லுக்கில் சூர்யா – ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ!
சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 05 Apr 2026 15:19 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவர் சமீப ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ் படங்களில் மட்டுமே நடித்துவந்த நிலையில், தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தயாராகிவந்த படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி (RJ. Balaji) இயக்கியுள்ள நிலையில், வரும் 2026 மே மாதத்தில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள் என்று கூறலாம். அந்த வகையில் இப்படத்தை அடுத்தாக தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் மற்றும் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்திலும் புது படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார்.

அதில் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் சூர்யா47 (Suriya47) படத்தில், நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அந்த வகையில் போலீஸ் தோரணையில், மாஸ் மற்றும் இளமையான லுக்கில் சூர்யாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. சமீபத்தில் கேரளா, கொச்சி விமான நிலையத்தில், நடிகர் சூர்யா மாஸாக நடந்துசென்ற வீடியோ தற்போது தீயாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: ஆக்ஷன் நாயகனாக டோவினோ தாமஸ்.. வெளியானது பள்ளிச்சட்டம்பி பட அதிரடி ட்ரெய்லர்!

ரசிகர்கள் மத்தியில் வைரலாக சூர்யாவின் நியூ லுக் வீடியோ பதிவு:

நடிகர் சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் கருப்பு படத்தை தொடர்ந்து ஒப்பந்தமாகியுள்ள படம்தான் சூர்யா 47. இந்த படத்தை ஃபகத் ஃபாசிலின் ஆவேஷம் படத்தை இயக்கியிருந்த, ஜித்து மாதவன் இயக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படமானது , தமிழ் மற்றும் மலையாளம் மொழியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறதாம். இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நசீம் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: வாரிசு பட செட்-ல நடத்த நகைச்சுவை சம்பவம் – ஓபனாக சொன்ன ராஷ்மிகா மந்தனா!

இப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு பின், தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஜித்து மாதவன் இயக்க, சூர்யா மற்றும் ஜோதியாகிவின் புது தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் மலையாள இளம் நடிகர் நஸ்லென் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் கேரளா சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2027ம் ஆனது தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Follow Us