இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யும் கருப்பு படக்குழு – வைரலாகும் தகவல்
Karuppu Movie Audio Launch Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குஅக்ளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அப்டேட் இணையஹ்ட்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோ போல இந்த கருப்பு படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடையாக காரணத்தால் வேறு சில காரணங்களாலும் கருப்பு படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்ட்டது.
ஆனால் படம் வெளியாவில்லை. அதற்கு பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கருப்பு படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு பிறகு சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.




சூர்யாவின் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?
இந்த நிலையில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவாந்த்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் 26-ம் தேதி 2026-ம ஆண்டு மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Karuppu is planning a grand audio launch on April 26th, which will be telecast on Zee Tamizh on May 1st (holiday). The movie is planned for a grand theatrical release on May 14th.#Suriya#RJBalaji pic.twitter.com/9LeXKBBKX0
— Movies Singapore (@MoviesSingapore) April 3, 2026
Also Read… பேமிலி ஆக்ஷன் கதையில்.. லெஜெண்ட் சரவணனின் லீடர் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!