AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மலையாள சினிமா வரலாற்றில் முதன்முறையாக… நேரடியாக தியேட்டரில் வெளியாகும் பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர்

Actors Mammootty and Mohanlal Starring Patriot Movie Trailer Release Update: மலையாள சினிமாவில் இதுவரை எப்போதும் நடைபெறாத ஒன்றாக படத்தின் ட்ரெய்லர் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி பாட்ரியாட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாள சினிமா வரலாற்றில் முதன்முறையாக… நேரடியாக தியேட்டரில் வெளியாகும் பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர்
பேட்ரியாட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Apr 2026 14:00 PM IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இருவரும் பல நூறு படங்களில் நடித்துள்ளனர். தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களிலும் அவ்வபோது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இவர்களின் வாரிசுகள் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் நிலையில் அவர்கள் இருவரும் தொடர்ந்து இளைஞர்களுக்கு போட்டியாக பிசியாக படங்களில் நடித்து வருகின்றனர். அதன்படி கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரின் நடிப்பில் அடுத்தடுத்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டிலும் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து எப்போது நடிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது போல மலையாள சினிமாவில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து எப்போது நடிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அவர்களின் பல ஆண்டுகளின் எதிர்பார்ப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

நேரடியாக தியேட்டரில் வெளியாகும் பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர்:

அதன்படி நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் பேட்ரியாட். இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். முன்னதாக படம் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டிற்கு படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற 04-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் இதுதான் முதன்முறை ட்ரெய்லர் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா – வைரலாகும் பதிவு

நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… மகாநதி படத்தில நடிச்ச போது நான் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தேன் – நடிகை சங்கீதா ஒபன் டாக்

Follow Us