நடிகை ரோஜாவின் பிரம்மாண்ட வீடு.. குக் வித் கோமாளி 7 சீசன் குழு வெளியிட்ட வீடியோ!
Roja Home Tour Video: தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தவர் நடிகை ரோஜா. இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் புது நடுவராக நுழைந்துள்ளார். இவரின் பிரம்மாண்ட வீடு குறித்து வெளியான வீடியோவை பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கடந்த 90ஸ் தொடக்கத்தில் பிரபல கதாநாயகியாக இருந்துவந்தவர் நடிகை ரோஜா (Roja). இவர் தற்போதும் சில படங்களில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் இவர் தெலுங்கில் அரசியல்வாதியாகவும் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இவரை தற்போது தமிழில் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் (Cook with Comali Season 7) நடுவராக பங்கேற்கவுள்ளார். ஏற்கனவே இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) என இரு நடுவர்கள் இருந்த நிலையில், தற்போது 3வது நடுவராக ரோஜா நுழைந்துள்ளார். ஏற்கனவே வெளியான சீசங்களை விடவும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியானது மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. இந்த் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஜோடியாக, அதாவது கணவன் மனைவியாக கலந்துகொள்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை ரோஜாவை நடுவராக அறிமுகப்படுத்தும் விதத்தில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் நடிகை ரோஜாவின் பிரம்மாண்டமான வீடு காட்டப்பட்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஏன் தமிழில் பேசவில்லை? கொஞ்சம் டைம் கொடுங்க – கயாடு லோஹர் சொன்ன பதில்!
குக் வித் கோமாளி நடுவர் ரோஜா குறித்து வெளியான வீடியோ :
View this post on Instagram
இந்த் வீடியோவில், நடிகை ரோஜாவின் வீட்டு முழுக்க டூர் காட்டும் விதத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகை ரோஜா, தன்னுடைய வீடு மற்றும் குக் வித் கோமதி சீசன் 7 நிகழ்ச்சி குறித்தும் பேசுவது போல அமைந்துள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சி:
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. இதுவரை இந்த நிகழ்ச்சி 6 சீசங்களை கடந்து மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்ப்பை பெற்றுவருகிறது. அந்த விதத்தில் இந்த 2026ம் ஆண்டின் சிறப்பாக குக் வித் கோமாளி சீசன் 7 ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசன் 7 வரும் 2026 ஏப்ரல் 4ம் தேதியில் இரவு 9:30 முதல் ஒளிபரப்பாகிறது.
இதையும் படிங்க: அஜித் இங்க பாரு… எங்க ஷாலினி… வைரலாகும் கியூட் வீடியோ
அந்த விதத்தில் இந்த போட்டியில் பிக்பாஸ் கானா வினோத் மற்றும் அவரின் மனைவியும், அய்யனார் சீரியல் புகழ் நடிகர் அரவிந்த் செஜு மற்றும் அவரின் மனைவி சங்கீதா சாய், நடிகை சம்யுக்தா ஷண்முகம் மற்றும் அவரின் கணவர் அஜய், விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா மற்றும் அவரின் கணவர் ரியாஸ் என மொத்தம் 4 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



