அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?
Madhumitha Hirannaiah Salary: தமிழில் விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் அதிகம் இருக்கும் சீரியல்தான் அய்யனார் துணை. இந்த சீரியலில் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மதுமிதா. இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என விவரமாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் மக்கள் அதிகம் சீரியல்களை விரும்பி வருகிறார்கள். அந்த விதத்தில் சீரியல்கள் வெளியாகும் முக்கிய தொலைக்காட்சிகளாக விஜய் டிவி (Vijay TV), ஜீ தமிழ் மற்றும் சன் டிவி போன்ற சேனல்கள் இருக்கிறது. அந்த விதத்தில் டிஆர்பி ரேட்டிங்கை (TRP Rating) மையமாக கொண்டு எந்த சேனல் முன்னிலை வகிக்கிறது என்று அடிக்கடி தகவல்கள் வெளியாகிவருவது வழக்கமே. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ள சீரியல்தான் அய்யனார் துணை (Ayyanar Thunai). இந்த சீரியலானது கடந்த 2025ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடஙகியிருந்தது. இந்த சீரியலில் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துவருபவர்தான் மதுமிதா ஹிரன்னையா (Madhumitha Hirannaiah). இவர் இந்த அய்யனார் துணை சீரியலில் “நிலா சோழன்” என்ற வேடத்தில் நடித்துவருகிறார். இவரின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டதாக, இந்த சீரியல் ஒளிபரப்பாகிவருகிறது.
அந்த விதத்தில் இந்த சீரியலில் நடிப்பதற்கு நடிகை மதுமிதா ஹிரன்னையா, ஒருநாளைக்கு எவ்வளவு பணத்தை சம்பளமாக பெறுகிறார் தெரியுமா?. அய்யனார் துணை சீரியலில் நிலவாக நடிக்கும், நடிகை மதுமிதா ஹிரன்னையா ஒருநாளைக்கு ரூ 20,000 சம்பளமாக வாங்குகிறாராம். தற்போது இது தொடர்பான தகவல்கள் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அதனால் பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.. இப்போது அதை சமாளிக்க கற்றுக்கொண்டேன் – ஸ்ரீலீலா!
நடிகை மதுமிதா ஹிரன்னையா இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை மதுமிதா ஹிரன்னையா நடித்துவரும் சீரியல்கள் :
நடிகை மதுமிதா ஹிரன்னையா, ஆரம்பத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகிவந்த பிரியாத வரவேண்டும் என்ற சீரியலில் நடித்துவந்தார். இதை தொடர்ந்து தெலுங்கிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார். அந்த விதத்தில் இவருக்கு பிரபலத்தை கொடுத்த சீரியல் எதிர்நீச்சல். சன் தொலைக்காட்சியில் ஒளிபரபகைவரும் இந்த சீரியலில் நடிகை மதுமிதா, “ஜனனி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் கடந்த 2022ம் ஆண்டுமுதல் ஒளிபரப்பாக தொடங்கிவிட்டது.
இதையும் படிங்க: சினிமாவில் 49 ஆண்டுகளை கடந்த ராதிகா சரத்குமார்.. கேக் வெட்டி கொண்டாடிய ஹாய் படக்குழு!
இதையடுத்து இந்த சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, விஜய் டிவியில் இவர் நடித்துவரும் சீரியல்தான் அய்யனார் துணை. இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம்தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதில் நிலா சோழன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல்தான் முதல் இடத்தில உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.