CWC 7: குக் வித் கோமாளி சீசன் 7 எப்போது ஆரம்பம்? போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
Cook with Comali Season 7: விஜய் தொலைக்காட்சியில் காமெடி, பொழுதுபோக்கு மற்றும் மக்களுக்கு மிகவும் நெருக்கமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் சீசன் 7 விரைவில் வெளியாகின்ற நிலையில், இதன் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்துவருவதுதான் குக் வித் கோமாளி (Cook With Comali). இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) மிகவும் பேமஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில், டைட்டில் வின்னராக பிக்பாஸ் புகழ் ராஜு வெற்றியாளரானார். அதை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 7 (Cook with Comali Season 7) எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுவந்தது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியானது தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சீசன் 7 நிகழ்ச்சியில் நடுவராக நடிகை ரோஜாவும் (Roja) இணைந்துள்ளார்.
ஆக மொத்தத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு என மொத்தம் 3 நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறார்கள். அந்த விதத்தில் இந்த குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியானது வரும் 2026 ஏப்ரல் 4ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. மேலும் இதன் போட்டியாளர்கள் யார் யார் என பார்க்கலாம்.




இதையும் படிங்க: கதைக்காக அல்ல…தேதி கிடைக்கல – ஜி.வி.பிரகாஷ் தவறவிட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?
குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் :
பொதுவாக குக் வித் கோமாளி சீசன்களில் போட்டியாளர்கள் தனி தனியாக கலந்துகொண்டு வருவது வழக்கமே, ஆனால் இந்த சீசன் 7 நிகழ்ச்சியில் குக்கள் ஜோடியாக கலந்துகொள்கிறார்கள். அதாவது ஜோடி ஜோடியாக மொத்தம் 4 ஜோடிகள் இந்த நிகழ்ச்சிகள் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி நடிப்பில் ஓடிடியில் வெளியாகி உள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியின் முதல் இரு ஜோடியாக பிக்பாஸ் கானா வினோத் மற்றும் அவரின் மனைவியும், அய்யனார் சீரியல் புகழ் நடிகர் அரவிந்த் செஜு மற்றும் அவரின் மனைவி சங்கீதா சாய் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டுள்ளனர். மேலும் நடிகை சம்யுக்தா ஷண்முகம் மற்றும் அவரின் கணவர் அஜய், விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா மற்றும் அவரின் கணவர் ரியாஸ் என மொத்தம் 4 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.
குக் வித் கோமாளி சீசன் 7 போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு புரோமோ பதிவு:
இனி Couple Cooks-ஓட Double Trouble 😀
Cooku with Comali Sesaon 7 – ஏப்ரல் 4 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில..#DoubleTrouble #CookuWithComaliSeason7 #CookuWithComali7 #CookuwithComali #CWC #VijayTelevision #VijayTV pic.twitter.com/84E4i1ZmU5
— Vijay Television (@vijaytelevision) March 27, 2026
இந்த சீசன் 7 நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சுனிதா, ராமர், தங்கதுரை என பல கோமாளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது வரும் 2026 ஏப்ரல் 04ம் தேதியில் இரவு 9:30 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.