AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

GV Prakash: கதைக்காக அல்ல…தேதி கிடைக்கல – ஜி.வி.பிரகாஷ் தவறவிட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?

G.V. Prakash Reveals Missed Films: தென்னிந்திய சினிமாவில் சிறந்த மியூசிக் டைரக்டர் மற்றும் நடிகராக இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தான் தவறவிட்ட திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

GV Prakash: கதைக்காக அல்ல…தேதி கிடைக்கல – ஜி.வி.பிரகாஷ் தவறவிட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?
ஜி.வி.பிரகாஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 29 Mar 2026 12:42 PM IST

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) சினிமாவில் சிறந்த நடிகராகவும், இசையமைப்பாளராகவும் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருக்கிறார். இவர் இசையமைப்பாளராக தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களுடனும் பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஹேப்பி ராஜ் (Happy Raj). இந்த படத்தை அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்க, ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியான் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படமானது கடந்த 2026 மார்ச் 27ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், தற்போது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த விதத்தில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், தேதிகள் இல்லாத காரணத்தால் தான் கைவிட்ட படங்கள் என்னென்ன என்பது குறித்துள்ளார்.

இதையும் படிங்க: வெறும் பாடகி மட்டுமில்ல.. இனி பிரபல நடிகையும் கூட.. சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ள ஜோனிடா காந்தி!

தேதி கிடைக்காததால் தான் தவறவிட்ட படங்கள் குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் பேச்சு:

அந்த நேர்காணலில் பேசிய நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார், “நான் சில திரைப்படங்களை தவறவிட்டேன். அது கதைக்காக இல்லை, தேதிகள் பிரச்சனையின் காரணமாக தான். ஆதி நடித்திருந்த மரகத நாணயம் படத்தில் எனக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது, ஆனால் அவர்களுக்கு உடனடியாக தேதிகள் தேவை பட்டது.அதன் காரணமாக என்னால் அதில் நடிக்கமுடியவில்லை. மேலும் ரவி மோகனின் கோமாளி படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது, ஆனால் தயாரிப்பாளர் பெரிய நடிகர் யாராவது நடிக்கவேண்டும் என விரும்பினார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? – வைரலாகும் தகவல்!

மேலும் தெலுங்கில் நானி நடித்திருந்த தசரா படத்திலும் ஸ்பெஷல் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது, ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

ஹேப்பி ராஜ் திரைப்படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு:

ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஒரு கம்பேக் படமாகவே ஹேப்பி ராஜ் திரைப்படம் அமைந்துள்ளது. இப்படம் ஆக்ஷன், காமெடி மற்றும் தந்தை எமோஷனல் கதைக்களத்தில் சிறப்பாக வெளியாகியிருந்தது. திரையரங்குகளில் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவரும் நிலையில், வார இறுதியை ஒட்டி மேலும் வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us