Sasi: மீண்டும் ஒரு அம்மா மகன் கதை.. ஆனால் நூறு சாமி படம் உங்களை ஆச்சரியப்படுத்தும் – இயக்குநர் சசி!
Director Sasi About Nooru Saami Movie Plot: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்துவருபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் முதலில் வெளியாகி தயாராகியுள்ள படம்தான் நூறு சாமி. இதை இயக்குநர் சசி இயக்கியிருக்கும் நிலையில், இப்படத்தின் கதை எப்படிப்பட்டது என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் சசி (Director Sasi). இவரின் இயக்கத்தில் இதுவரை பல சிறப்பான திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி (Vijay Antony) இணைந்து நடித்துள்ள திரைப்படம்தான் “நூறு சாமி” (Nooru Saami). இந்த படமானது முற்றிலும் அம்மா மகன் பாச போராட்டம் மற்றும் எமோஷனலான கதைக்களத்தில் அமைந்துள்ளது. ஏற்கனவே விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசியின் கூட்டணியில் பிச்சைக்காரன் என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. அந்த விதத்தில் இவர்களின் கூட்டணியில் 2வது தயாராகியுள்ள படம்தான் நூறு சாமி. இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதில் விஜய் ஆண்டனி லீட் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்வாசிகா (Swasika) நடித்துள்ளார். இந்த படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மே 1ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சசி பேசுகையில், நூறு சாமிபடத்தின் கதைக்களம் குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: என் தம்பி விக்னேஷ் சிவனுக்காக அந்தப் படத்தில் நடித்தேன் – சீமான் பேச்சு
விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் சசி சொன்ன விஷயம் :
இயக்குநர் சசிகுமார் பேசுகையில், “அம்மாவை தெய்வம், சாமி என ஆதரித்து கொண்டாடுகிறோம் . ஆனால், அம்மாவை உயிராகவும் பாருங்கள் என்று சொல்லும் படம் நூறு சாமி. ஒரு மகன் தனது அம்மாவை சாமியாக நினைத்தால் அது பிச்சைக்காரன், அதுவே ஒரு மகன் தன் அம்மாவை ஒரு மனுஷியாக நினைத்தால் அது நூறு சாமி. காலகாலமாக கட்டமைக்கப்பட்டுவருவதை உடைத்து, நெஞ்சை உலுக்கும் விதத்தில் கேள்வி கேட்கும் படமாக நூறு சாமி இருக்கும். பேரன்போடும்,பெருந்துணையோடும் ஒரு அம்மா கதாபாத்திரத்தை உருவாக்க முடியுமா? என நான் முயற்சி செய்துள்ளேன்.
இதையும் படிங்க: கர படத்திற்காக தனுஷ் சார் சொன்ன விஷயம்.. நான் பிரம்மித்துபோனேன்- இயக்குநர் விக்னேஷ் ராஜா!
நூறு சாமி பட கதையை விஜய் ஆன்டனியிடம் சொல்லும்போது அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. தன்னை விடவும் ஸ்வாசிகவின் கதாபாத்திரத்திற்கு கூடுதல் இருந்தாலும், அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். விஜய் ஆண்டனி தயாரித்த பிச்சைக்காரன் படத்தை விடவும், சிறப்பான இடத்தை பெரும் என நமிக்கை அவருக்கு இருக்கு. லப்பர் பந்து படத்தை பார்த்தபிறகு,ஸ்வாசிகவின் நடிப்பு ரொம்பவே பிடித்திருந்தது. இந்த படத்திற்கும் அவரின் கதாபாத்திரம் நன்றாகவே அமைந்தது. இப்படத்தில் அவரின் நடிப்பு ஒரு பந்தத்தை உணரவைக்கும். அவர் அவரின் கேரக்டரில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்” என கூறியுள்ளார்.
நூறு சாமி படம் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு:
இரு விழிகள் பேசித் தோற்கும் கலை… #MaayaKanavo ❤️
The soul stirring first single from #Noorusaami is out now!
Let the magic of love take over ✨
A @imbalajisriram Musical
🎙️ @Chinmayi @Kapilkapilan_
✒️ @Lyricist_Mohan@vijayantony #Sasi… pic.twitter.com/XrkE6GOz1H— vijayantony (@vijayantony) March 25, 2026
இந்த நூறு சாமி படமானது முற்றிலும் எமோஷனல் மற்றும் பாசம் போன்ற கதைக்களத்தில் அமைந்துள்ள நிலையில், வரும் 2026 மே 1ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்துடன் அன்று சாய் பல்லவியின் “ஒரு நாள்” என்ற படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.