Kara Movie: கர படத்திற்காக தனுஷ் சார் சொன்ன விஷயம்.. நான் பிரம்மித்துபோனேன்- இயக்குநர் விக்னேஷ் ராஜா!
Director Vignesh Raja About Dhanush: விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் தமிழில் தயாராகியுள்ள 2வது படம்தான் கர. இந்த படத்தில் தனுஷ் லீட் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. அந்த விதத்தில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விக்னேஷ் ராஜா, கர படத்திற்காக தனுஷ் சொன்ன விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.
பான் இந்திய கதாநாயகனாக மக்கள் மத்தியில் இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இதுவரை 53 திரைப்படங்களுக்கும் மேல் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் டி54 தயாராகியுள்ள படம்தான் “கர” (Kara). இந்த திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியுள்ள நிலையில், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்த படத்திற்கு முன், தமிழில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் வெளியாகியிருந்த போர் தொழில் (Por Thozhil) என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது இவருக்கு மக்கள் மத்தியில் சிறப்பான பிரபலத்தை கொடுத்திருந்தது. இதையடுத்து இவரின் இயக்கத்தில் 2வது தயாராகியுள்ள படம்தான் கர.
இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த விதத்தில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் விக்னேஷ் ராஜா, கர திரைப்படத்திற்காக தனுஷ் கேட்டுக்கொண்ட விஷயம் குறித்து மனம் திறந்துள்ளார்.




இதையும் படிங்க: ரியோ ராஜ் நடிப்பில் ராம் இன் லீலா படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது
கர திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் கேட்டுக்கொண்ட விஷயம் குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா சொன்ன விஷயம்:
அந்த நேர்காணலில் விக்னேஷ் ராஜா பேசுகையில், “கர படத்திற்காக தனுஷ் சார் என்னிடம், “என்னை ஹீரோவாக காட்டுவதற்காக வலுக்கட்டாயமாக எதையும் செய்யாதீர்கள். இப்படத்தின் கதையிலே வீரம் இருக்கிறது அதுவே போதும், அதற்குள்ளே என்ன செய்யமுடியுமோ அதை செய்யலாம்” என சொன்னார். மேலும் இப்படத்தின் எடிட்டிங்கின்போது அவரின் நடிப்பை பார்த்து பிரம்மித்துபோனேன். என்னால் எனது எமோஷனலை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இதையும் படிங்க: தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இணையத்தில் வைரலாகும் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி?
நான் அவருக்கு ஒரு 10 வரிகளில் வசனம் கொடுத்திருந்தாலும், அவருடைய முகபாவனை அதையும் தாண்டி நிற்கும். நான் எதிர்பார்த்ததை மிஞ்சிய நடிப்பை அவர் கொடுப்பார். நடிப்பை பொறுத்தவகையிலும் அவருக்கெனவே தனித்துவ பாணி இருக்கிறது. அதையெல்லாம் நேரில் காணவும், உணரவும் எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது” என அதில் தெரிவித்துள்ளார்.
கர திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுகம் குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு:
#FacesOfKara crosses 2.5M+ cumulative digital views 💣
▶️ https://t.co/ftBqCTOOnd#KaraFromApril30
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd @RedGiantMovies_… pic.twitter.com/dBX7wpEIIJ— Vels Film International (@VelsFilmIntl) March 27, 2026
தனுஷின் கர படமானது இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ளது. இதுவரை இப்படத்திலிருந்து முதல் பாடல் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.