AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என் தம்பி விக்னேஷ் சிவனுக்காக அந்தப் படத்தில் நடித்தேன் – சீமான் பேச்சு

Seeman talks about Love Insurance Kompany Movie: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகர் சீமான் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

என் தம்பி விக்னேஷ் சிவனுக்காக அந்தப் படத்தில் நடித்தேன் – சீமான் பேச்சு
சீமான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Mar 2026 14:23 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்த சீமான் தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அரசியலில் பிசியாக வலம் வரும் சீமான் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பிறகு படம் ஒத்திவைக்கப்படுவது வலக்கமாகவே இருந்தது. இந்தப் படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான படங்கள் எல்லாம் வெளியாகி ஓர் ஆண்டு நிறைவையும் கொண்டாடிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியானது. அதன்படி படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 10ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சீமான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

என் தம்பி விக்னேஷ் சிவனுக்காக அந்தப் படத்தில் நடித்தேன்:

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நான் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்தேன். அந்த வேடத்தில் நான் நடிப்பது எனக்குச் சிறப்பாக இருக்கும் என்று என் தம்பி விக்னேஷ் சிவன் கேட்டதால், நான் அதில் நடித்தேன். 5 முதல் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு தேவைப்படும் சிறிய குணச்சித்திர வேடங்களில் என்னால் நடிக்க முடியும். ஆனால், இயக்கம் அல்லது முழு நீளத் திரைப்படங்களில் நடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு என்னிடம் தற்போது நேரமில்லை. என்னிடம் நேரம் இருந்திருந்தால், நான் நிச்சயமாக இயக்கம் சார்ந்த பணிகளைச் செய்திருப்பேன். ஆனால், தற்போதைய சூழலில் என்னிடம் அதற்கான நேரம் துளியும் இல்லை.

எனது இயக்கத்தில் வெளியான தம்பி என்ற திரைப்படம் மீண்டும் வெளியாவது என்னுடன் தொடர்புடையது அல்ல. ஒரு சகோதரர் ஒருவர் அப்படத்தை மீண்டும் வெளியிடுவதற்கான உரிமையை வாங்கி, தற்போது அதை வெளியிடுகிறார். திரைப்படங்கள் அரசியலில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தொலைக்காட்சியில் ஒவ்வொரு மாதமும் அந்தப் படத்தை ஒளிபரப்புகிறார்கள், மக்கள் அதை ஒருமுறை பார்த்துவிட்டு, அதன்பின் தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடரச் சென்றுவிடுகிறார்கள் என்றும் சீமான் தெரிவித்து இருந்தார்.

Also Read… Ramayana: ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்.. ராணாயணம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

இணையத்தில் வைரலாகும் சீமான் பேச்சு:

Also Read… பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படம் எப்போது ரிலீஸ் ஆகிறது? வைரலாகும் தகவல்

Follow Us