ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் சூப்பர் ஹிட் த்ரிஷ்யம் 2 படம்… எப்போது தெரியுமா?
Mohanlals Drishyam 3 Movie Re Release in Theatres: நடிகர் மோகன்லால் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தப் படம் த்ரிஷ்யம் 2. இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில் குறிப்பாக க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியாகும் படங்களுக்கு வரவேற்பு அதிகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மலையாள சினிமாவில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற க்ரைம் த்ரில்லர் படம் த்ரிஷ்யம். இந்தப் படத்தின் இரண்டு பாகங்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வருகின்ற மே மாதம் 21-ம் தேதி 2026-ம் ஆண்டு த்ரிஷ்யம் 3 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முன்னதாக வெளியான த்ரிஷ்யம் 2 படத்தினை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் த்ரிஷயம் 2. நடிகர் மோகன்லால் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தினை இயக்குநர் ஜீத்து ஜோசஃப் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகம் எப்போது மீண்டும் வெளியாகும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.




ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் சூப்பர் ஹிட் த்ரிஷ்யம் 2 படம்:
அதன்படி த்ரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் வெளியாவதற்கு முன்னதாக படக்குழு இரண்டாவது பாகத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் மோகன்லால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, த்ரிஷ்யம் 2 அது உண்மையில் சேரவேண்டிய இடத்திற்கே திரும்புகிறது. ஏப்ரல் மாதம் 10ம் தேதி 2026 ஆண்டு முதல் திரையரங்குகளில் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Also Read… நிவின் பாலியின் பிரதிசாயா படத்திலிருந்து வெளியானது தலவா பாடல் வீடியோ
நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Drishyam 2, returns to where it truly belongs.
In theatres from April 10th, 2026.#Drishyam2 @aashirvadcine @antonypbvr pic.twitter.com/cBGsLEPC1D
— Mohanlal (@Mohanlal) March 25, 2026
Also Read… Jana Nayagan: ஜன நாயகன் பட ஓடிடி உரிமையை ரத்து செய்த அமேசான் பிரைம்? – வைரலாகும் தகவல்!