AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jonita Gandhi: வெறும் பாடகி மட்டுமில்ல.. இனி பிரபல நடிகையும் கூட.. சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ள ஜோனிடா காந்தி!

Jonita Gandhi Special Dance: பான் இந்திய சினிமாவில் சிறந்த படகிகளில் ஒருவராக இருந்துவருபவர் ஜோனிடா காந்தி. இவர் பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி தனது குரலினால் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது புது முயற்சியாக திரைப்படம் ஒன்றில் சிறப்பு நடனமாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

Jonita Gandhi: வெறும் பாடகி மட்டுமில்ல.. இனி பிரபல நடிகையும் கூட.. சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ள ஜோனிடா காந்தி!
ஜோனிடா காந்திImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 29 Mar 2026 11:45 AM IST

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பாடகியாக, பல பாடல்களை பாடி ஹிட் கொடுத்திருப்பவர் ஜோனிடா காந்தி (Jonita Gandhi). இவர் பிரபல கனடா பாடகியும் கூட, இவரின் பாடல்கள் இந்தியாவை தாண்டி பல்வேறு நாடுகளிலும் ஒளித்துவருகிறது. அந்த விதத்தில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான “சென்னை எக்ஸ்பிரஸ்” என்ற படத்தில் பாடல் பாடியதான் மூலம் பாடகியாக அறிமுகமானார். பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார். அந்த விதத்தில் தமிழில் இவருக்கு முதல் படமாக அமைந்தது கடந்த 2015ம் ஆண்டில் வெளியான “ஓ காதல் கண்மணி” (O Kadhal Kanmani). இந்த படத்தில் “மெண்டல் மனதில்” என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், பெங்காலி என பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார்.

அந்த விதத்தில் பாடகியாக இருந்த இவர், தற்போது சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடி சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி மொழியை மையமாக கொண்டு உருவாகியுள்ள “டகோய்ட்” (Dacoit) என்ற படத்தில், “சிச்சுபுத்தி” (Chichubuddi) என்ற பாடல் ஒன்றில் நடனமாடி அசத்தியுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: டீசரில் பாதிதான்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இன்னும் சர்ப்ரைஸ் இருக்கு – ஜிவி.பிரகாஷ் பேச்சு!

பாடகி ஜோனிடா காந்தி நடனமாடிய பாடல் குறித்த பதிவு:

டகோய்ட் திரைப்படம் :

பிரபல இயக்குநர் ஷனில் டியோ இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் டகோய்ட். இந்த படத்தில் நடிகர் ஆத்வி சேஷ், மிருணாள் தாக்கூர், பிரகாஷ் ராஜ், அனுரகா காஷியப் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அதிரடி காதல், ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இப்படமானது அமைந்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் பீம்ஸ் செசிரோலியோ என்பவர் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: LIK படம் எப்போ ரிலீசாகும்?.. காமெடியாக படக்குழு வெளியிட்ட புரோமோ வீடியோ!

இவரின் இசையமைப்பில், ஜோனிடா காந்தி பாடி நடனமாடியுள்ள பாடல்தான் சிச்சுபுத்தி. இந்த பாடலின் மூலமாக நடிகை ஜோனிடா காந்தி சினிமாவில் நடிகையாகவும் நுழைந்துள்ளார். அந்த விதத்தில் இப்படம் வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படம் ரிலீஸாகும் அதே தேதியில், தமிழில் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us