AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

LIK படம் எப்போ ரிலீசாகும்?.. காமெடியாக படக்குழு வெளியிட்ட புரோமோ வீடியோ!

Love Insurance Kompany Movie Promo: இயக்குநராக நுழைந்து, தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து அசத்திவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் 2வதாக உருவாகியிருந்த படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், தற்போது புது ரிலீஸ் தேதி குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

LIK படம் எப்போ ரிலீசாகும்?.. காமெடியாக படக்குழு வெளியிட்ட புரோமோ வீடியோ!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்பட ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 29 Mar 2026 10:53 AM IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிப்பில் இதுவரை தமிழில் 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் 2வது திரைப்படமாக கடந்த 2024ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட படம்தான் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (Love Insurance Kompany). இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்க, செவன் ஸ்க்ரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் எஸ்.எஸ் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படமானது எதிர்காலத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அந்த விதத்தில் தற்போது மீண்டும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்யும் விதத்தில், காமெடியுடன் புரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டீசரில் பாதிதான்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இன்னும் சர்ப்ரைஸ் இருக்கு – ஜிவி.பிரகாஷ் பேச்சு!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெளியாகியுள்ள புரோமோ வீடியோ:

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் 4வது பாடல் அப்டேட்:

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருடன் க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கௌரி கே கிஷன், சீமான், யோகிபாபு, ஷாரா, மிஷ்கின், அனந்த ராஜ் , சுனில் ரெட்டி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை தீமா தீமா, பட்டுமா மற்றும் எனக்கென யாருமில்லையே போன்ற மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. இப்பாடல்கள் இன்றுவரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? – வைரலாகும் தகவல்!

அந்த விதத்தில் இதன் 4வது பாடல் குறித்தும் படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் 4வது பாடல் “அடாவடி”, விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2026 மார்ச் 31ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிறகாவது இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us