AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

GV Prakash: டீசரில் பாதிதான்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இன்னும் சர்ப்ரைஸ் இருக்கு – ஜிவி.பிரகாஷ் பேச்சு!

GV Prakash About Vishwanath And Sons Movie: நடிகர் சூர்யா நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இதன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இப்படம் எவ்வாறு வந்துள்ளது என்பது குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

GV Prakash: டீசரில் பாதிதான்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இன்னும் சர்ப்ரைஸ் இருக்கு – ஜிவி.பிரகாஷ் பேச்சு!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்து ஜி.வி. பிரகாஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Mar 2026 21:07 PM IST

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) மற்றும் நடிகர் சூர்யாவின் (Suriya) கூட்டணியில் மிகவும் சிறப்பாக தயாராகியுள்ள படம்தான் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” (Vishwanath And Sons). இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்க, சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்தில் சூர்யா முன்னணி நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் என பல்வேறு பிரபலங்களும் இதில் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது 40 வயதிற்கும் மேல் இருக்கும் தொழிலதிபரான சூர்யாவிற்கும், இளம் வயது ஆடம்பர பெண் மமிதா பைஜூவிற்கும் மலரும் காதலை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது.

இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார்தான் (GV.Prakash Kumar) இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அவர், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: வெறுப்பையோ வன்முறையையோ பணமாக்க விரும்பாத படம்.. பிரபல படத்தை தாக்கி பேசிய வெற்றிமாறன்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் பகிர்ந்த விஷயம்:

அந்த நேர்காணலில் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், “விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் பல சர்ப்ரைஸான் விஷயங்கள் இருக்கு. நாங்கள் டீசரில் அதில் பாதி மட்டுமே காண்பித்திருக்கிறோம். உண்மையிலே லக்கி பார்க்கச படத்திற்கு பிறகு, நான் சூர்யா சாரிடம் வெங்கி அட்லூரியுடன் படம் செய்ய சொன்னேன். தற்போது அதன் அவுட்புட் தரமாக வந்துள்ளது. இந்த படத்தில் இசை மற்றும் பாடல்களுக்கு நிறைய முக்கியத்துவம் உள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு அம்மா மகன் கதை.. ஆனால் நூறு சாமி படம் உங்களை ஆச்சரியப்படுத்தும் – இயக்குநர் சசி!

சூர்யா சாரின் பெண் ரசிகைகள் விரும்பும் வகையில் இப்படத்தை சுவாரஸ்யமாக கொண்டுவந்துள்ளோம். நான் ஸ்கூல் படிக்கும்போது, ​​கஜினி மற்றும் காக்க காக்க படங்களை ரசித்துப் பார்ப்பேன். அப்படித்தான் நாம் சூர்யா சாரைப் பார்த்திருக்கிறோம். இப்படத்திலும் அவர் அப்படியே இருக்கிறார்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், சூர்யா மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 படத்தில் நடித்துவருகிறார். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது காதல் கதையில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 ஜூலை மாதத்தில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us