தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த மேட் ஸ்கொயர் ஒரு ஆண்டை நிறைவு செய்தது
One Year Of Mad Square Movie: தெலுங்கு சினிமாவில் ஆக்ஷன் காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றப் படம் மேட் ஸ்கொயர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளதை படக்குழு கொண்டாடி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மேட். கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து மிகவும் ஜாலியான ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்தது. இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் உருவானது. அதன்படி இந்தப் படத்திற்கு மேட் ஸ்கொயர் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த மேட் ஸ்கொயர் படம் கடந்த 28-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் வெளியகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இந்த மேட் ஸ்கொயர் படத்தினை இயக்குநர் கல்யாண் சங்கர் எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர்கள் நார்னே நிதின், சங்கீத் சோபன், ராம் நிதின், பிரியங்கா ஜவால்கர், விஷ்ணு ஓய், பிரம்மானந்தம், சுனில், சுபலேகா சுதாகர், கிருஷ்ண பகவான், ரகு பாபு, சத்யம் ராஜேஷ், முரளிதர் கவுட், கார்த்திகேய சாமலா, ரவி அந்தோணி பூடோடா, அனிஷ் குருவில்லா, கே.வி. அனுதீப், ஸ்ரீ கௌரி பிரியா, பிரபாஸ் ஸ்ரீனு, ரோஹன் ராய், ஆட்டோ ராம்பிரசாத், ரம்யா பசுப்புலேட்டி, கிருஷ்ணா கமல், ரெபா மோனிகா ஜான் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
ஒரு ஆண்டை நிறைவு செய்தது மேட் ஸ்கொயர் படம்:
காமெடி ஆக்ஷன் பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றத் குறிப்பிடத்தக்கது.
Also Read… ஒரிஜினல் ஸ்டோரியில் உருவான ஒரு வெப் ஸ்டோரி… இந்தியில் வெளியான இந்த ஹெல்லோ பச்சோன் சீரிஸை கண்டிபா பாருங்க!
மேட் ஸ்கொயர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
They are back and audience rocked
multiplex lo kooda Mass Madness Choosarro….💥💥💥#1YearForMadSquare and standing tall with all your never ending love ❤️🔥❤️🔥#MadSquare @NarneNithiin #SangeethShobhan #RamNitin @ItsJawalkar @MusicThaman @kalyanshankar23 @vamsi84… pic.twitter.com/Sj7L55s7TC— Sithara Entertainments (@SitharaEnts) March 28, 2026
Also Read… அரசன் படத்தில் சிம்புவிற்கு ஜோடி இவரா? வைரலாகும் தகவல்



