AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசன் படத்தில் சிம்புவிற்கு ஜோடி இவரா? வைரலாகும் தகவல்

Arasan Movie Female Lead Update Viral On Social Media: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் அரசன். இந்தப் படத்தில் எந்த நடிகை நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அரசன் படத்தில் சிம்புவிற்கு ஜோடி இவரா? வைரலாகும் தகவல்
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Mar 2026 11:34 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்களில் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படம் மட்டும் இன்றி சிம்புவின் நடிப்பில் உருவாக உள்ள மற்றப் படங்களின் அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இந்த அரசன் படத்தை தயாரித்து வருகிறார். படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அரசன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அரசன் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அரசன் படத்தில் சிம்புவிற்கு நாயகியாகும் பிரியங்கா மோகன்?

அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த அரசன் படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வரும் தனுஷ், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் நடைபெறாதா? இணையத்தில் வைரலாகும் தகவல்

Follow Us