AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷின் கர படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்

Kara Movie Tamil Nadu Theatrical Rights Bagged By Red Giant Movies : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தனுஷின் கர படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்
கரImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Mar 2026 12:36 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்தப் படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவிலேயே படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. அதன்படி தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக வெளியாக உள்ள படம் கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார் இந்தப் படத்தை.

இந்த கர படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன் மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் வேல்ஸ் இண்டர்நேஸ்னல் சார்பாக தயாரிப்பாளர் ஐசர் கே கணேஷ் இந்தப் படத்தினை தயாரித்து உள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்:

இந்த கர படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாப்பாத்திரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இன்று மாலை படத்தின் புரோமோ வீடியோ வெளியாக உள்ள நிலையில் இந்த கர படத்தினை தமிழகத்தில் எந்த நிறுவனம் தியேட்டர்களின் வெளியீட்டை கைப்பற்றியுள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Also Read… மேடி படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட ரியோ ராஜ்!

கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நல்ல கலைஞர்கள் கஷ்டப்பட்டு உழைச்சு இருக்காங்கன்னு எங்களுக்காக வந்து நின்னாரு கமல் சார் – இயக்குநர் பிரபு சாலமன் எமோஷ்னல் பேச்சு

Follow Us