நாளை திரையரங்குகளில் வெளியாகும் பிரதிசாயா படத்தின் டீசர் இதோ
PRATHICHAYA(Teaser) : மலையாள சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் நாளை திரிஅயரங்குகளில் வெளியாக உள்ள பிரதிசாயா படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பேபி கேர்ள். ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் மருத்துவமனையில் வேலை செய்துவரும் நிவின் பாலி அங்கு பிறந்த பெண் குழந்தை காணாமல் போனதை தேடிச் செல்கிறார். அப்படி தேடிச் செல்லும் போது என்ன எல்லாம் நடந்தது என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நிவின் பாலி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பிரதிசாயா. இந்தப் படத்தை இயக்குநர் உன்னிகிருஷ்ணன் பி எழுதி இயக்கி உள்ளார். பொலிட்டிகள் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள படம் நாளை 26-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் பிரதிசாயா படத்தின் டீசர்:
நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள இந்த பிரதிசாயா படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் ஷரஃப் யு தீன், பாலச்சந்திர மேனன், ஹரிஸ்ரீ அசோகன் மணியன்பிள்ளை ராஜு, ஆன் அகஸ்டின், நீத்து கிருஷ்ணா, சபிதா ஆனந்த், விஷ்ணு அகஸ்தியா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Shruti Haasan: துல்கர் என்னை எப்போதும் அப்படிதான் அழைப்பார் – ஸ்ருதிஹாசன் பகிர்ந்த விஷயம்!
நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Teaser OUT NOW.
Prathichaya From Tomorrow ✨
Book Your Ticket’s Now 💫
Written & Directed by Unnikrishnan B
Produced by Sree Gokulam Movies & RD Illuminations LLP#UnnikrishnanB #SreeGokulamMovies #RDIlluminationsLLPhttps://t.co/nq0AnLvLHP— Nivin Pauly (@NivinOfficial) March 25, 2026
Also Read… Youth Movie: கென் கருணாஸின் யூத் படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்திய சூர்யா மற்றும் கார்த்தி!