AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 47 படத்தில் நஸ்ரியாவிற்கு ஆக்‌ஷன் சீன் இருக்குதா? வைரலாகும் தகவல்

Suriya 47 Movie Shooting Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதுகுறித்து தற்போது பாக்கலாம்.

சூர்யா 47 படத்தில் நஸ்ரியாவிற்கு ஆக்‌ஷன் சீன் இருக்குதா? வைரலாகும் தகவல்
சூர்யா 47Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Mar 2026 18:44 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாவதாக நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி உள்ள கருப்பு படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த இரண்டு மாத இடைவெளியில் வருகின்ற ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வருவது தற்போது சூர்யா 47 படம் ஆகும். இந்தப் படத்தை மலையாள சினிமாவில் ஆவேஷம் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நஸ்ரியா மற்றும் நஸ்லேன் உட்பட பல மலையாள திரையுலக பிரபலங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 47 படத்தில் நஸ்ரியாவிற்கு ஆக்‌ஷன் சீன் இருக்குதா?

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னதாக கேரளாவில் தொடங்கி நடைப்பெற்று வந்த நிலையில் அங்கு உரிய அனுமதி கிடைக்க தாமதம் ஏற்படுவதால் படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்றது வருகின்றது. தற்போது சூர்யா 47 படத்தில்சென்னையில் நஸ்ரியா நடிக்கும் ஒரு அதிரடிச் சண்டைக்காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இக்காட்சிக்கான நடன அசைவுகளை சேத்தன் டிசோசா வடிவமைத்துள்ளார். இந்தப் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்ளவில்லை.

இப்படத்தில் நஸ்லெனின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும், முழுமையானதொரு அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யா ஒரு காவல்துறை அதிகாரியாக, முற்றிலும் மாறுபட்டதொரு பாணியில் தோன்றுவது ரசிகர்களுக்குப் புத்துணர்ச்சியூட்டுவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… Karuppu: சிம்பு – அசல் கோளாறு குரலில்.. வெளியானது கருப்பு பட ‘நாங்க நாலு பேரு’ வீடியோ பாடல்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தளப் பதிவு:

Also Read… லவ் ஆக்‌ஷன் ட்ராமா படத்தின் பார்ட் 2 வருமா? வைரலாகும் வீடியோ

Follow Us