Kara Movie: தனுஷின் ஸ்பீசிற்கு தயாரா? கர படத்தின் ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா?
Kara Movie Audio Launch Update: பான் இந்திய சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் 54வது திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் கர திரைப்படம். இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகவுள்ளது. இதன் இசைவெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
போர் தொழில் (Por Thozhil) என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Rara). இவர் இப்படத்தை அடுத்ததாக தனது இரண்டாவது படத்திலே தனுஷுடன் (Dhanush) இணைந்திருந்தார். இப்படமானது ஆரம்பத்தில் டி54 (D54) என அழைக்கப்பட்டுவந்த நிலையில், பின் “கர” (Kara) என டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் தனுஷ் ஆக்ஷன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். மமிதா பைஜூ ஏற்கனவே விஜய், சூர்யா மற்றும் பிரதீப் ரங்கநாதன் போன்ற பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கும் நிலையில், தனுஷுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துள்ளார்.
இவரின் இசையமைப்பில் “வாயா ஏய் கரசாமி” என்ற முதல் பாடல் இணையத்தில் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் எப்போது எங்கு நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: இன்றைய தலைமுறைக்கு என்ற திரைப்படம்.. கென் கருணாஸின் யூத் படத்தை பாராட்டிய சிலம்பரசன்!
தனுஷின் கர படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த தகவல் :
இந்த கர படத்தின் இசை வெளியீட்டுவிழா வரும் ஏப்ரல் 11ம் தேதியில், சென்னையில் உள்ள நேரு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
கர திரைப்படத்தின் முதல் பாடல் 10 மில்லியன் கடந்ததாக வெளியாகியுள்ள பதிவு:
10M views and the fire’s still spreading 🔥
#VaayaEyKarasaamiOut now ▶️ https://t.co/Pec8PhHBAP
Dhanush in & as Kara
A @gvprakash musical 🥁
🎙️ @Arunrajakamaraj @anthonydaasan #Satyan #VMMahalingam
🖊️ @Arunrajakamaraj#KaraFromApril30Directed by @vigneshraja89… pic.twitter.com/lLMJ7DD0iU
— Vels Film International (@VelsFilmIntl) March 21, 2026
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையமைப்பில், தனுஷின் கர படத்தின் பாடல்கள் அனைத்தும் உருவாகியுள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. தற்போது இதிலிருந்து வாயா ஏய் காரசாமி என்ற முதல் பாடல் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு அழைக்கவில்லை என வீடியோ போட்ட கியூட் சிறுமி.. வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த விரோஷ் தம்பதியினர் – வீடியோ!
இந்த படலானது தற்போது இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், இதுவரை யூடியூப்பில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாம். இது குறித்து படக்குழு ஸ்பெஷல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகி காத்திருக்கும் நிலையில், இதன் புரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.