AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் படத்திற்கு தனுஷ் கொடுத்த விமர்சனம் இதுதான் –  வைரலாகும் பதிவு!

Dhanush talks about GV Prakash Kumars Happy Raj movie: தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள ஹேப்பி ராஜ் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் கொடுத்த விமர்சனம் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் படத்திற்கு தனுஷ் கொடுத்த விமர்சனம் இதுதான் –  வைரலாகும் பதிவு!
ஹேப்பி ராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Mar 2026 21:44 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்கள் மட்டும் தான் படங்களில் நடிப்பார்கள் என்ற நிலை மாறி சினிமாவில் மற்ற துறைகளில் உள்ளவர்களும் தொடர்ந்து படங்களில் நாயகன்களாகவும் மற்ற சிறப்புக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் தற்போது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து இளைஞர்களை கவரும் வகையில் கதைகளை தேர்வு செய்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து ஜாலியான படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் அவ்வபோது கதைகளை மையமாக வைத்து வெளியாகும் படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார்.

அதன்படி ஜிவி பிரகாஷ் குமர் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கிங்ஸ்டன். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் மிகவும் ஜாலியான வைபில் வெளியாக உள்ள படம் ஹாப்பி ராஜ். இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனை நடிகர் தனுஷ் வெளியிட்டு இருந்தார்.

ஹேப்பி ராஜ் படத்திற்கு தனுஷ் கொடுத்த விமர்சனம் இதுதான்:

அதன்படி இன்று 17-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு ஹேப்பி ராஜ் படத்தின் ட்ரெய்லரை தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் படம் குறித்த விமர்சனத்தை தெரிவித்து இருந்தார். தனுஷ் கூறியதாவது, நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவரது குழுவினரிடமிருந்து வெளிவந்த அந்தப் படம் மிகவும் வேடிக்கையாகவும், ஆச்சரியப்படும் விதமாக மனதைத் தொடுவதாகவும் இருக்கிறது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Vijay Antony: மீண்டும் சசியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி.. வெளியானது ‘நூறு சாமி’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் தனுஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Vijay Sethupathi: சினிமாவில் ஏ.ஐ சிறந்த ஐடியாவை கொடுக்கிறது.. ஆனால் – விஜய் சேதுபதி பகிர்ந்து சுவாரஸ்ய விஷயம்!

Follow Us