AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிரிச்சுக்கிட்டே ஒரு ஹாரர் படம் பார்க்கனுமா? அப்போ மலையாள சினிமாவில் வெளியான இந்த பிரகம்பனம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்

Prakambanam Horror Comedy Movie OTT Update: மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தப் படம் பிரகம்பனம். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சிரிச்சுக்கிட்டே ஒரு ஹாரர் படம் பார்க்கனுமா? அப்போ மலையாள சினிமாவில் வெளியான இந்த பிரகம்பனம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்
பிரகம்பனம்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Mar 2026 19:23 PM IST

தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக குறிப்பாக மலையாள சினிமாவில் வெளியாகும் ஹாரர் காமெடி படம் ரசிகர்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி 2026-ம் ஆண்டு மலையாள சினிமாவில் திரையரங்குகளில் வெளியான படம் பிரகம்பனம். ஹாரர் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் விஜேஷ் பனத்தூர் இயக்கி இருந்த நிலையில் ஸ்ரீஹரி வடக்கன் படத்திற்கு திரைக்கதையை எழுதி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் கணபதி எஸ்.பொதுவால், சாகர் சூர்யா, அல் அமீன் மற்றும் மல்லிகா சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஷீத்தல் ஜோசப், ராஜேஷ் மாதவன், அஸீஸ் நெடுமங்காடு, கலாபவன் நவாஸ், அலெக்சாண்டர் பிரசாந்த், பி.பி.குன்கிகிருஷ்ணன், அபிஜித் சுரேஷ், லால் ஜோஸ், சனேஷ் கின்னஸ், சுபின் டார்சன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படதிற்கு இசையமைப்பாளர் பிபின் அசோக் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பிரகம்பனம் படத்தின் கதை என்ன?

நடிகர்கள் கணபதி, சாகர் மற்றும் அமீன் ஆகியோர் ஹாஸ்டலில் தங்கியிருந்து  கல்லூரியில் ஒன்றாக படித்து வருகின்றனர். இதில் கணபதியின் பாட்டி உயிரிழந்ததாக ஒருநாள் தகவல் வந்த நிலையில் அவரை காண்பதற்காக சொந்த ஊருக்கு செல்கிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் கல்லூரிக்கு திரும்பும் கணபதியிடம் அவரது தாத்தா பாட்டியின் அஸ்தியை காசிக்கு எசுத்துச்சென்று கரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

Also Read… Kayadu Lohar: அந்த மாதிரியான ரோலில் நடிக்க ரொம்ப ஆசை – கயாடு லோஹர் சொன்ன விஷயம்!

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணபதி அதனை செய்ய முதலில் மறுக்கிறார். பிறகு அஸ்தியை சட்டியோரு எடுத்துச்சென்றால் தான் பிரச்சனை என்று அதனை கொஞ்சமாக மூக்கும்பொடி டப்பாவில் போட்டு எடுத்துச் செல்கிறார். இப்படி இருக்கும் சூழலில் ஹாஸ்டலில் சாகர், கணபதி பேகில் உள்ள மூக்குப்பொடி டப்பாவில் இருந்த அஸ்தியை மூக்குப்பொடி என்று நினைத்து மூக்கில் இழுக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அமீன் உடலில் கணபதியின் பாட்டியான மல்லிகா சுகுமாரனின் ஆத்மா செல்கிறது. இதனைத் தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் என்ன எல்லாம் நடந்தது என்பதை மிகவும் காமெடியாக இந்தப் படத்தில் காட்டியுள்ளனர். இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… ‘துரந்தர் 2’ படத்தை உச்சிமுகர்ந்த ரஜினிகாந்த்.. “வாழ்வின் மிகப்பெரிய தருணம்” என மெய்சிலிர்த்த இயக்குநர்..

Follow Us