AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Prabhu Deva: வீடியோ பாடலின் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரபு தேவாவின் மகன்!

Prabhu Devas Son Debut Song: பான் இந்திய நடிகர் மற்றும் பிரபல நடன கலைகராக இருந்துவருபவர் பிரபு தேவா. இவர் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் மகன் ரிஷி தேவா வீடியோ பாடலின் மூலம் சினிமாவில் நுழைந்துள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Prabhu Deva: வீடியோ பாடலின் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரபு தேவாவின் மகன்!
முதல் முதலாய் வீடியோ பாடல் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Mar 2026 17:11 PM IST

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடன கலைஞராகவும், நடிகராகவும் இருந்துவருபவர் பிரபு தேவா (Prabhu Deva). இவரின் நடிப்பில் இறுதியாக கடந்த 2024ம் ஆண்டில் ஜாலி ஓ ஜிம்கானா (Jolly O Gymkhana) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் பிரபு தேவா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மடோனா செபஸ்டியன் (Madonna Sebastian) கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு கவவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இதையடுத்து இந்தியில் பேட்டாஸ் ரவிக்குமார் என்ற படத்தில் நடித்திருந்தார் இதுவும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இதையடுத்து தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கு இவர் ஆர்வம் காட்டிவரும் நிலையில், தற்போது மூன் வாக் (Moon Walk) என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். அசத்தல் காமெடி மற்றும் முழுக்க பொழுதுபோக்கு கதைக்களத்தில் இப்படம் தயாராகியுள்ளது.

இதை இயக்குநர் மனோஜ் நிர்மலா சீதாராம் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து கிட்டத்தட்ட 5 பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த விதத்தில் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா (Rishi Deva), தற்போது வீடியோ பாடலின் மூலம் சினிமாவில் நுழைந்துள்ளார்.

இதையும் படிங்க: இன்றைய தலைமுறைக்கு என்ற திரைப்படம்.. கென் கருணாஸின் யூத் படத்தை பாராட்டிய சிலம்பரசன்!

பிரபுதேவாவின் மகனின் முதல் முதலாய் வீடியோ பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி:

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா தற்போது சினிமாவில் இறங்கவுள்ளாராம். அதற்கு முதல் படியாகதான் பாடல் ஒன்றில் நடித்துள்ளார். இந்த பாடலை கண்ணெதிரே தோன்றினால், மஜ்னு மற்றும் சந்தித்த வேலை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் ரவிச்சந்திரன். இப்படங்களை இந்த இவர் படங்களை தொடர்ந்து இயக்கவில்லை என்ற நிலையில், தற்போது இசையமைப்பாளராக நுழைந்துள்ளார். இவரின் இசையமைப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய பாடல்தான் முதல் முதலாய்.

இதையும் படிங்க: திருமணத்திற்கு அழைக்கவில்லை என வீடியோ போட்ட கியூட் சிறுமி.. வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த விரோஷ் தம்பதியினர் – வீடியோ!

இப்பாடலின் வீடியோவில் பிரபு தேவாவின் மகன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கியாரா வாசுதேவன் நடித்துள்ளார். இந்த வீடியோ பாடலானது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. பிறப்பும் தேவாவை தொடர்நது அவரின் மகனும் சினிமாவில் நடிகராக நுழைகிறாரா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோ பாடல் இணையத்தில் பரப்பப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us