Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வடிவேலு – பிரபுதேவாவின் கூட்டணி.. வெளியானது புதிய படத்தின் அசத்தல் அறிவிப்பு!

Prabhu Deva And Vadivelu New Movie : தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்தான் வடிவேலு. இந்நிலையில் நடிகர் பிரபு தேவா மற்றும் வடிவேலு கூட்டணியில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடிவேலு – பிரபுதேவாவின் கூட்டணி.. வெளியானது  புதிய படத்தின் அசத்தல் அறிவிப்பு!
வடிவேலு மற்றும் பிரபு தேவா கூட்டணி படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 Aug 2025 20:19 PM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும், நடன இயக்குநராகவும் இருந்து வருபவர் பிரபுதேவா (Prabhu Deva). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜாலி ஓ ஜிம்கானா (Jolly O Gymkhana). இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை மடோனா செபஸ்டியன் (Madonna Sebastian) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்த பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில், நடிகர் பிரபு தேவா மற்றும் வடிவேலுவின் (Vadivelu) கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாம். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சாம் (Sam) இயக்கவுள்ளார்.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைக்கவுள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் பிரபு தேவா மற்றும் வடிவேலுவின் கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதிய படத்தின் ஷூட்டிங் பூஜைகள் இன்று 2025, ஆகஸ்ட் 25ம் தேதியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ஆக்ஷன் ஹீரோவாக அட்டகத்தி தினேஷ் – வெளியானது தண்டகாரண்யம் பட டீசர்!

வடிவேலு மற்றும் பிரபுதேவாவின் புதிய படத்தின் ஷுட்டிங் பூஜை பதிவு :

நடிகர் வடிவேலுவின் முன்னணி நடிப்பில் இறுதியாக மாரீசன் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அவர் நடிகர் ஃபகத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2025, ஜூலை இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் வடிவேலு மறதி நோயால் அவதிப்படும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். இதில் அவரின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க : தலைவர் நெக்ஸ்ட்.. கல்கி பட இயக்குநருடன் இணைகிறாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

இந்த படத்தை அடுத்ததாக வடிவேலு தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக கூறப்பட்ட நிலையில், இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் புதிய படத்தில், நடிகர் பிரபு தேவாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த படத்தை கே.ஜி.ஆர். தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளாராம். தற்போது வெளியான இந்த அறிவிப்புகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் பிரபுதேவா நடித்துவரும் படங்கள் :

நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் உருவாகிவருகிறது. இவர் கடந்த 2024ம் ஆனது வெளியான கோட் படத்தில் விஜயின் நண்பனாக நடித்திருந்தார். அதை அடுத்ததாக ஜாலி ஓ ஜிம்கானா என்ற படத்திலும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவரின் நடிப்பில் தமிழில் பிளாஷ் பேக், சிங்காநல்லூர் சிக்னல், உல்ஃப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.