Thandakaaranyam : ஆக்ஷன் ஹீரோவாக அட்டகத்தி தினேஷ் – வெளியானது தண்டகாரண்யம் பட டீசர்!
Thandakaaranyam Movie Teaser : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் பா. ரஞ்சித். இவரின் தயாரிப்பிலும், இயக்குநர் அதிரன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம். ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களை இருந்து வருபவர்கள் அட்டகத்தி தினேஷ் (Dinesh) மற்றும் கலையரசன் (Kalaiyarasan). இவர்கள் இருவரின் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தண்டகாரண்யம் (Thandakaaranyam). இந்த படத்தை இயக்குநர் அதிரன் ஆதிரை (Athiyan Athirai) இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் ஏற்கனவே இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ்தான் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தை அடுத்ததாக இரண்டாவது முறையாக, இந்த தண்டகாரண்யம் படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கிறார். இந்த தண்டகாரண்யம் திரைப்படத்தில் இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் (Pa.Ranjith) நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.
மேலும் நடிகர் அட்டகத்தி தினேஷ், இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வேட்டுவம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நடிகர் ஆர்யாவும் (Arya) நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தண்டகாரண்யம் படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், தற்போது படக்குழு டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசரானது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.




இதையும் படிங்க : தளபதி விஜய்யின் படத்தைப்போல சிவகார்த்திகேயன் படத்திலும்.. ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்த விஷயம்!
தண்டகாரண்யம் படக்குழு வெளியிட்ட டீசர் பதிவு :
A heart touched by love finds its truest self, even in the midst of chaos 🔥#Thandakaaranyam Teaser
▶️ https://t.co/HXXyn7090yஅன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது…#ThandakaaranyamFromSept19 #தண்டகாரண்யம் @beemji @LearnNteachprod pic.twitter.com/LMu9EdooIn
— Neelam Productions (@officialneelam) August 25, 2025
இந்த தண்டகாரண்யம் திரைப்படத்தில் நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா பன்னீர்செல்வம், ஷபீர் கல்லாரக்கல், வின்சு சாம், பால சரவணன். அருள்தாஸ், சரண்யா ரவிச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருகின்றனர். இந்த தண்டகாரண்யம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் உருவாகியிருக்கிறது.
இதையும் படிங்க : குட்டி தளபதி.. திடீர் தளபதினு சொல்லுறாங்க.. – தளபதி விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!
தண்டகாரண்யம் படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த தண்டகாரண்யம் திரைப்படமானது கடந்த 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, பின் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் முழுமையாக ஷூட்டிங் நிறைவடைந்திருந்தது. இந்த படமானது கிராமத்து கதைக்களத்துடன் மிக பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது. அதிரடி அக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சென்சார் குழு யு/ ஏ தர சான்றிதழை வழங்கியிருக்கிறது.
இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமானது வரும் 2025, செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இதை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.