Thandakaaranyam : அட்டகத்தி தினேஷ்- கலையரசனின் ‘தண்டகாரண்யம்’ – வெளியான அப்டேட்!
Thandakaaranyam Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருந்து வருபவர்கள் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன். இவர்கள் இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தண்டகாரண்யம். தற்போது இப்படத்திலிருந்து புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் பா. ரஞ்சித்தின் (Pa. Ranjith) நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம் (Thandakaaranyam). இந்த படத்தில் பிரபல நடிகர்களான கலையரசன் (Kalaiyarasan) மற்றும் அட்டகத்தி தினேஷ் (Dinesh) இணைந்து நடித்துள்ளனர். இந்த புதிய படமானது முற்றிலும் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் அதியன் அதிரை (Athiyan Athirai) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இந்த தண்டகாரண்யம் படமானது உருவாகி கிட்டத்தட்ட 1 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளது.
தற்போது இப்படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழைக் கொடுத்துள்ளதாம். இது குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : மாஸ் ஹிட்.. வசூலை வாரிக்குவிக்கும் கூலி.. முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?
தண்டகாரண்யம் படக்குழு வெளியிட்ட சென்சார் அறிவிப்பு
அமரன்கள் செய்த அநீதிகளை பேசும் #தண்டகாரண்யம் 🔥#Thandakaaranyam certified U/A ✪
Announcing release date soon 🔜 @beemji @LearnNteachprod @AthiraiAthiyan @KalaiActor @Dineshoffical @Riythvika @VinsuSam @actorshabeer @ActorMuthukumar @Actor_ArulDass @SaranyaRavicha7 pic.twitter.com/3IzJHX3vmf
— Neelam Productions (@officialneelam) August 15, 2025
இந்த தண்டகாரண்யம் திரைப்படமானது திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இப்படத்தில் கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் நடிகர்கள் ரித்விகா பன்னீர்செல்வம், பாலா சரணவனன், வேட்டை முத்துக்குமார், அருள்தாஸ், ஷபீர் கல்லரக்கல் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் என பல்வேறு பிரபல நடிகர்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : கவின் நடித்திருக்கும் ‘கிஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வைரலாகும் தகவல்!
தண்டகாரண்யம் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :
நடிகர் அட்டகத்தி தினேஷின் நடிப்பில் இறுதியாக வெளியான லப்பர் பந்து படமானது மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்ற வெற்றி பெற்றிருந்தது. அந்த படத்துக்கு பிறகு அட்ட கத்தி நடிப்பில் வெளியாகும் படம் தான் இந்த தண்டகாரண்யம்.
இப்படத்தின் முழுவதும் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணியில் இருக்கிறது.இப்படமானது வரும் 2025, செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பதைப் பற்றிய அறிவிப்பைப் படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.