Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dear Students : நயன்தாரா – நிவின் பாலியின் ‘டியர் ஸ்டூடண்ஸ்’ படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட் இதோ!

Dear Students Movie Teaser Release Update : தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவர்தான் நிவின் பாலி. நயன்தாரா மற்றும் இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டியர் ஸ்டூடண்ஸ். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dear Students : நயன்தாரா – நிவின் பாலியின் ‘டியர் ஸ்டூடண்ஸ்’ படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட் இதோ!
நயன்தாரா மற்றும் நிவின் பாலிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Aug 2025 20:36 PM

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவிலும் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நேரம் (Neram) என்ற படத்தின் மூலம் தமிழில் பிரபலமான இவர், ப்ரேமம் (Premam) படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் 2 படங்கள் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறது. இந்த படங்களை அடுத்ததாக இவர் நடித்திருக்கும் படம்தான் டியர் ஸ்டூடண்ஸ் (Dear Student). இந்த படத்தை இயக்குநர் சந்தீப் குமார் (Sundeep Kumar) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியிலும் சில படங்களை இயக்கியிருக்கிறார். இந்த டியர் ஸ்டூடண்ஸ் படத்தில் நிவின் பாலி முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா (Nayanthara) நடித்திருக்கிறார். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படமானது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஜூன் மாத இறுதியில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியீட்டு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த டியர் ஸ்டூடண்ஸ் படத்தின் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாளை 2025, ஆகஸ்ட் 15ம் தேதியில், மாலை 5 மணியளவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை நடிகர் நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : விக்ரமில் ரோலக்ஸ் போல.. கூலியில் வரவேற்பைப் பெற்றதா ஆமிர்கானின் கதாபாத்திரம் ?

டியர் ஸ்டூடண்ஸ் டீசர் ரிலீஸ் குறித்து நிவின் பாலி வெளியிட்ட பதிவு :

இந்த டியர் ஸ்டூடண்ஸ் திரைப்படமானது முற்றலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம். இப்படத்தில் நயன்தாரா மற்றும் நிவின் பாலி முக்கிய வேடத்தில் நடிக்க அவர்களுடன் நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, அஜூ வர்கீஸ், ஷரபியுதீன் மற்றும் ஜானி ஆண்டனி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது முற்றிலும் அதிரடி ஆக்ஷ்ன் , காதல் மற்றும் நகைச்சுவை கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கவின் நடித்திருக்கும் ‘கிஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வைரலாகும் தகவல்!

நிவின் பாலியின் தமிழ்த் திரைப்படம் :

இவர் இயக்குநர் ராமின் நடிப்பில் ஏழு மலை ஏழு கடல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில், இந்த படமானது இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதை அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகிவரும் பென்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கிவருகிறார். இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸிற்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.