Kiss Movie : கவின் நடித்திருக்கும் ‘கிஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வைரலாகும் தகவல்!
Kiss Movie Release Update : தமிழ் சினிமாவில் சின்னதிரை மூலம் நடிகராக மாறியவர்களில் ஒருவர் கவின் ராஜ். இவரின் நடிப்பில் ரோமெண்டிக் மற்றும் நகைச்சுவை கதைக்களம் கொண்ட படம்தான் கிஸ். இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சின்னதிரை மூலம், வெள்ளித் திரைக்கு நுழைந்தவர்களில் ஒருவர் கவின் ராஜ் (Kavin Raj). இவர் ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் மக்களிடையே பிரபலமானார். அதை அடுத்தாக பின் சினிமாவிலும் நடிகராக நுழைந்தார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இதுவரை சில படங்கள் வெளியாகியிருந்தாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றியிருக்கிறது. இவரின் நடிப்பில் டாடா (dada) மற்றும் ஸ்டார் (Star) போன்ற படங்கள் ஹிட் கொடுத்திருந்தது. இது அடுத்ததாகப் பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் (Sathish Krishnan) இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் படம் கிஸ் (Kiss). இந்த படமானது ரொமாண்டிக் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு வெளியீட்டிற்குக் காத்திருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பதைப் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 19ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்துப் படக்குழு எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க : கூலியில் நடந்த சர்ப்ரைஸ்.. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான் இதுதான்!
கிஸ் படம் குறித்து கவின் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Thirudi… ♥️
A @JenMartinmusic musical ♥️
Thank you Ani sir.. Pala varsha kanavu 🙏🏼@anirudhofficial ♥️@mynameisraahul @dancersatz @preethiasrani_ @dop_harish @peterheinoffl master#MohanaMahendiran @editorrcpranav @iamgunashekar @sonymusicsouth @SureshChandraa
▶️… pic.twitter.com/dy9z9DoGid
— Kavin (@Kavin_m_0431) April 30, 2025
கவினின் கிஸ் திரைப்படம் :
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் , சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம்தான் கிஸ். இந்த படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலேயும் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த கிஸ் படத்தில் நடிகர் கவின் ராஜிற்கு ஜோடியாக, நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் அயோத்தி படத்தில் நடித்திருக்கிறார். மேலும் கிஸ் படத்தை அடுத்து நடிகர் எஸ். ஜே. சூர்யா இயக்கி, நடித்துவரும் கில்லர் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதை விட அதுதான் ரொம்ப பிடிக்கும் – நடிகர் அர்ஜுன் ஓபன் டாக்
கிஸ் படத்தின் நடிகர்கள் :
இந்த கிஸ் படத்தில் கவின் ராஜ் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய வேடத்தில் நடிக்க, அவர்களுடன் நடிகர்கள் பிரபு, தேவயானி, விடிவி கணேஷ், ராம் ரமேஷ், சக்தி ராஜ் என பல்வேறு நடிகர்கள் நடித்திருக்கிறனர். இந்த படமானது ஆரம்பத்தில் கடந்த 2025, ஜூலை மாதத்தில் வெளியிட உள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்னும் இப்படத்தின் ஓடிடி மற்றும் ரிலீஸ் உரிமை விற்கப்படாத காரணத்தால் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாகவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 19ம் தேதியில் வெளியாகும் எனக் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.