சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதை விட அதுதான் ரொம்ப பிடிக்கும் – நடிகர் அர்ஜுன் ஓபன் டாக்
Actor Arjun: கோலிவுட் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று அன்புடன் அழைக்கப்படுவர் நடிகர் அர்ஜுன். இவரது ஆக்ஷன் காட்சிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் இவர் ஆக்ஷன் விட வேற ஒரு விசயம் சினிமாவில் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கன்னட சினிமாவில் கடந்த 1981-ம் ஆண்டு நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் அர்ஜுன் சார்ஜா (Actor Arjun Sarja). தொடர்ந்து கன்னட சினிமாவில் நடித்து வந்த இவர் 1984-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான நன்றி என்ற படதின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழில் இவர் நடித்தப் பலப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் அர்ஜுனின் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்று பெயர் வைத்தனர். புரூஸ்லியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட அர்ஜுன் அவர் நடிக்கும் படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் புரூஸ்லி போல சண்டையிடுவார். அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விசயமாக இருந்தது.
அப்படி நடிகர் அர்ஜுன் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான தாய்மேல் ஆணை, பட்டிக்காட்டு தம்பி தொடங்கி ஜென்டில்மேன், ஜெய்கிந்த், குருதி புனல், செங்கோட்டை, தாயின்மணிக்கொடி, முதல்வன், வேதம், ஏழுமலை, கிரி, அரசாட்சி, மங்காத்தா என தொடர்ந்து இவரது நடிப்பில் பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




ஆக்ஷன் விட காமெடி காட்சிகள் தான் பிடிக்கும்:
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனக்கு சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதைவிட காமெடி காட்சிகளில் நடிப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கிரி படத்தில் அவர் நடித்த காமெடி காட்சி குறித்தும் அர்ஜுன் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதன்படி கிரி படத்தில் நடிகர் அர்ஜுன் மற்றும் வடிவேலு இருவருக்கும் ஒரு காமெடி காட்சி இருக்கும். அதில் வடிவேலு குடும்ப ரகசியம் என்று ஒரு விசயத்தை அர்ஜுனிடம் யார்கிட்டையும் சொல்லாத என்று சத்யம் வாங்கிவிட்டு சொல்லுவார். அன்று இரவு அர்ஜுன் யாரிடமும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக வடிவேலு அர்ஜுனை தன்னுடனே இருக்க சொல்வார்.
மறுநாள் காலையில் வடிவேலு அர்ஜுனிடம் சொன்ன ரகசியம் ஊர் முழுக்க தெரிந்துவிடும். இது எப்படி நடந்தது என்பது தான் படத்தின் காமெடி. அதைக் குறிப்பிட்டு பேசிய அர்ஜுன் எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது. எப்படி அந்த விசயம் வெளியபோனது என்று கலகலப்பாக பேசியுள்ளார். இந்த பேட்டி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
Also Read… Coolie Movie X Review: கோலாகலமாக வெளியான கூலி படம் – மக்களின் விமர்சனம் என்ன?
நடிகர் அர்ஜுன் சமீபத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
View this post on Instagram
Also Read… ரசிகர்களுக்கு மட்டுமில்லை எனக்கும் அந்த கதாப்பாத்திரம் பிடிக்கவில்லை – நடிகை அனுபமா பரமேசுவரன்