Thalaivan Thalaivii : தலைவன் தலைவி படத்தின் டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு!
Thalaivan Thalaivii Movie Deleted Scenes : மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தலைவன் தலைவி. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் பாண்டிராஜின் (Pandiraaj) இயக்கத்தில், இவர் நடித்திருந்த திரைப்படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii) . இந்த படத்தில் விஜய் சேதுபதி முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகை நித்யா மேனன் (Nithya Menen) இணைந்த நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, ஜூலை 25 ஆம் தேதி முதல் தமிழில் உலகமெங்கும் வெளியானது. பின் கடந்த 2025, ஆகஸ்ட் 1ம் தேதியில் சார் மேடம் (Sir Madam) என்ற பெயரில் தெலுங்கு மொழியில் வெளியானது.
இந்த படமானது மக்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது என்றே கூறலாம். இந்நிலையில், இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை (Deleted scenes) படக்குழு வெளியிட்டுள்ளது. தலைவன் தலைவி படமானது திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தின் டீசர் ரெடி.. எப்போது ரிலீஸ் தெரியுமா?
தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட டெலீட்டட் சீன் வீடியோ :
Not in theatres, but now in your feed! A never seen before deleted scene from #ThalaivanThalaivii ❤️🫶
▶️https://t.co/bCsiv6lG03@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu@Music_Santhosh @Lyricist_Vivek @thinkmusicindia @studio9_suresh@Roshni_offl @kaaliactor…
— Sathya Jyothi Films (@SathyaJyothi) August 10, 2025
தலைவன் தலைவி படத்தில் மொத்த வசூல்
நடிகர் விஜய் சேதுபதியின் 51வது திரைப்படமாக இந்த தலைவன் தலைவி திரைப்படம், கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் தென் மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த படமானது முற்றிலும் ஒரு குடும்ப படமாக உருவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கணவன் மனைவிக்கு இடையே உருக்கும் பிரச்னைகள், விவாகரத்துபோன்ற கதைக்களத்துடன் இப்படம் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி 2 வரங்களான நிலையில், இதுவரை சுமார் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இப்படமானது மக்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றிருந்தது என கூறலாம்.
இதையும் படிங்க : பிரபாஸின் பாகுபலி தி எபிக் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது :
இந்த தலைவன் தலைவி படமானது திரையரங்குகளில் மக்களிடையே நல்ல விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படமானது வெளியாகி 4 அல்லது 6 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதன்படி, இந்த 2025, ஆகஸ்ட் மாதத்தின் இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.