Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – சிறப்பு அனிமேஷன் டைட்டில் கார்டை உருவாக்கியது கூலி படக்குழு

50 Years Of Rajini: சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் கூலி. இந்தப் படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படத்தின் டைட்டில் கார்ட் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – சிறப்பு அனிமேஷன் டைட்டில் கார்டை உருவாக்கியது கூலி படக்குழு
கூலி படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Aug 2025 12:08 PM

நடிகர் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாகிர், நாகர்ஜுனா மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள நிலையில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. கடந்த 2-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு படத்டின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

இதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படத்தின் புரமோஷன் பணிகளிலும் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்:

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகம் ஆகி 50 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனைத் கொண்டாடும் வகையில் கூலி படக்குழு படத்தின் டைட்டில் கார்டை அனிமேஷனில் உருவாக்கியுள்ளனர். அதில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பாட்ஷா, அண்ணாமலை, முத்து மற்றும் படையப்பா என பலப் படங்களின் கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூலி படம் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த டைட்டில் கார்ட் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது. மேலும் திரையரங்குகளில் இதனைப் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயமாக இது பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… கல கல காமெடிக்கும் பஞ்சம் இல்லாத ப்ரோ டாடி படம்… ஹார்ஸ்டாரில் மிஸ்செய்யாமல் பாருங்க!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Ajith Kumar : ’வீட்ல போய் நான் காலில் விழணும்’ வைரலாகும் அஜித் – ஷாலினி வீடியோ!