Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar : ’வீட்ல போய் நான் காலில் விழணும்’ வைரலாகும் அஜித் – ஷாலினி வீடியோ!

Ajith Kumar And Shalini Viral Video : தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோடிகளின் ஒன்ற அஜித் மற்றும் ஷாலினி. தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் ஜோடிகளில் ஒருவார்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் வரலட்சுமி விரதத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar : ’வீட்ல போய் நான் காலில் விழணும்’ வைரலாகும் அஜித் – ஷாலினி வீடியோ!
அஜித் குமார்-ஷாலினிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Aug 2025 10:44 AM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் அஜித் குமார் (Ajith KUmar). இவரின் நடிப்பில் இதுவரை பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இறுதியாக வெளியாகி வசூலை அள்ளிய திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). அஜித் குமாரின் 63வது திரைப்படமாக வெளியானது. இது சுமார் ரூ.250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றிருந்தது. இதை அடுத்ததாக, தற்போது அஜித் குமார் கார் ரேஸில் (Car Race) முழுவதுமாக மூழ்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் குமார் மற்றும் ஷாலினி (Shalini) இருவரும் கலகலவென பேசிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

சமீபத்தில் வரலட்சுமி விரதம் (Varalakshmi Vratham) மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தது. அந்த விரதத்தின்போது, அஜித் குமார் மற்றும் ஷாலினியின் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் அஜித் குமார் நகைச்சுவையாகப் பேசியுள்ளார். நடிகை ஷாலினி , அஜித் குமாரின் காலில் விழும்போது, அதற்கு அஜித் “வீட்டுக்குப் போனதும் நானும் விழணும்” என காமெடியாக கூறியிருந்தார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க :  ரஜினிகாந்த் VS ஆமிர் கான்.. ரசிகர்களிடையே வைரலாகும் நியூ போஸ்டர்!

இணையத்தில் வைரலாகும் அஜித் குமார் மற்றும் ஷாலினியின் வீடியோ :

அஜித் குமார் மற்றும் ஷாலினியின் காதல் :

நடிகை ஷாலினி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தனது சிறுவயது முதலே நடித்து வந்தார். பேபி ஷாலினி என்றால் அனைவருக்குமே தெரியும். அந்த அளவிற்குத் தான் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போதே பல ரசிகர்களைப் பெற்றார். மேலும் இவர் அஜித் குமாருடன் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் அமர்க்களம். கடந்த 1999ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலமாகவே இவர்களின் காதல் மலர்ந்தது.

இதையும் படிங்க : மதராஸி படத்தின் கதை இதுவா? – இணையத்தில் கசிந்த தகவல்!

இந்த அமர்க்களம் திரைப்படத்தை இயக்குநர் சரண் இயக்கியிருந்தார். இவர்கள் இவரின் ஜோடி இந்த படத்தில் வரவேற்பைப் பெற்றிருந்தது. பின் இந்த ஜோடி கடந்த 2000ம் ஆண்டிலே திருமணம் செய்துகொண்டது. திருமணத்திற்குப் பிறகு நடிகை ஷாலினி எந்த திரைப்படங்களிலும் இணைந்து நடிக்கவில்லை. மேலும் தற்போது வரையிலும் இவர் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது அஜித் குமாருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..