Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lokesh Kanagaraj : அஜித் குமாருடன் படம் பண்ணுவது எனது ஆசை.. லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகப் பேச்சு!

Lokesh Kanagaraj And Ajith Kumar Collaboration : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருகிறது. இவரின் இயக்கத்தில் கூலி படமானது வெளியீட்டிற்குத் தயாராகிவரும் நிலையில், ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அஜித் குமாருடன் திரைப்படத்தை இணைவது குறித்துப் பேசியுள்ளார்.

Lokesh Kanagaraj : அஜித் குமாருடன் படம் பண்ணுவது எனது ஆசை.. லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகப் பேச்சு!
லோகேஷ் கனகராஜ் மற்றும் அஜித் குமார்Image Source: IMDb
Barath Murugan
Barath Murugan | Published: 27 Jul 2025 16:25 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kangaraj) இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் லியோ (Leo). கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்தில் முன்னணி வேடத்தில் தளபதி விஜய் (Thalapathy VIjay) மற்றும் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், பான் இந்திய அளவில் சுமார் ரூ. 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த்துடன் (Rajinikanth) கூலி (Coolie) திரைப்படத்தில் இணைந்தார். அதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றுவந்தது என்றே கூறலாம். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கூலி படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அஜித் குமாருடன் (Ajith Kumar) படத்தில் இணைவீர்களா என்ற கேள்விக்குப் பதில் கொடுத்துள்ளார். அதில் அவர் நிச்சயமாக வாய்ப்பு கிடைத்தால் நடிகர் அஜித் சாருடன் படத்தில் இணைவேன் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த பிரபல இயக்குநர்!

அஜித் குமாருடன் படத்தில் இணைவது குறித்து லோகேஷ் கனகராஜ் பேச்சு:

அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம், விஜய், கமல் மற்றும் ரஜினி போன்ற நடிகர்களுடன் படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறீர்கள், நடிகர் அஜித் குமாருடன் எப்போது படத்தில் இணைவீர்கள் என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ” சமீபத்தில் நடிகர் அஜித் குமாருடன் படம் பண்ணவேண்டும் என நினைத்தேன். எனது ஸ்டைலில் அவருக்கு ஒரு ஆக்சன் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

இதையும் படிங்க : இதனால்தான் எனது குடும்ப வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்கிறேன் – லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

அதற்கான கதை குறித்தும் அவரிடம் பேசியிருக்கிறேன். ஆனால் அஜித் சாரின் விருப்பம் தற்போது கார் ரேஸில் இருக்கிறது, மேலும் நானும் என்னுடைய படங்களில் பிசியாக இருந்து வருகிறேன். ஒருவேளை இந்தக் கம்போ செட்டானால் நிச்சயமாகப் படத்தில் இணைவேன். அஜித் சாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா என்னிடம், எப்போது அஜித் குமாருடன் படத்தை இயக்கவிருக்கிறார் எனக் கேட்பார். நிச்சயமாக அதற்கான நேரமும், காலமும் கூடிவந்தால் அஜித் குமாருடன் 100 சதவீதம் படத்தில் இணைவேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா :

ரஜினிகாந்த்தின் கூலி படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீசை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா எப்போது என்ற அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 2025, ஆகஸ்ட் 2ம் தேதியில் சென்னை நேரு உள் அரங்கத்தில் நடைபெறும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.