Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இதனால்தான் எனது குடும்ப வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்கிறேன் – லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் ஒருவராக இருக்கிறார். இவரது படங்கள் குறித்தும் இவரைக் குறித்தும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் அவரது சொந்த வாழ்க்கை குறித்து வெளிப்படுத்தாத காரணத்தை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதனால்தான் எனது குடும்ப வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்கிறேன் – லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
லோகேஷ் கனகராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jul 2025 12:15 PM

கோலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநர்களின் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). இவரது சொந்த வாழ்க்கையை குறித்து பெரிய அளவில் ரசிகர்களுக்கு எந்த தகவலும் தெரியாது. மேலும் குடும்பத்தினரை பொது வெளியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் அதிக அளவில் அறிமுகம் செய்தது இல்லை. இப்படி இருக்கும் சூழலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களில் வேலைகளில் பிசியாகும் போது தான் சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் அவ்வப்போது அறிவிப்பது உண்டு. அந்த வகையில் இருதியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் பணிகளில் பிசியாக இருப்பதால் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கமாட்டேன் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தொடர்ந்து பேட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். அந்தப் பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் படம் குறித்தும் தனது சொந்த வாழ்க்கை குறித்தும் பல தகவல்களை பகிந்துகொண்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

சமூக ஊடகங்களில் அதிகமாக வெறுப்பு பரவுகிறது:

அந்த வகையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்தப் பேட்டி ஒன்றில் சமூக வலைதளத்தில் இருக்கிற வெறுப்புதான் என் குடும்ப வாழ்க்கையை நான் ரகசியமா வைத்திருக்க காரணம். உதாரணத்துக்கு எனது ட்விட்டர் கணக்கு ஸ்லீப் மோடில் இருந்த போது ஒரு Fan war போஸ்ட் தப்பா லைக் செய்துவிட்டேன்.

அதற்கு பிறகு எனக்கு நிறைய போன் கால்ஸ் வந்துச்சு, எனக்கு அது பிடிக்கல. அப்போதிருந்து என் மேனேஜர் மட்டும் தான் என் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் ஒரே ஒரு தமிழ் நடிகர்… ஆனால் அது விஜய் இல்லை!

இணையத்தில் கவனம் பெறும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பேச்சு:

Also Read… பிக்பாஸ் தமிழ் 9-வது சீசன் எப்போ தொடங்கபோகுது தெரியுமா? வைரலாகும் தகவல்!