பிக்பாஸ் தமிழ் 9-வது சீசன் எப்போ தொடங்கபோகுது தெரியுமா? வைரலாகும் தகவல்!
Bigg Boss Tamil season 9: தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 8 சீசன்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான 9-வது சீசன் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் இந்த சீசன் எப்போது துவங்கும் என்ற தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் தொலைக்காட்சியில் பிக் பிரதர் என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் பலதரப்பட்ட மக்களை வெளி உலக தொடர்பு எதுவும் இல்லாமல் ஒரு வீட்டிற்குள் நூறு நாட்கள் வாழ வைக்கும் ஒரு சைக்கலாஜிகள் எக்ஸ்பிரிமெண்டாக அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. முதலின் இந்தியாவில் இந்தி சினிமாவில் தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழில் முன்னதாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் படங்களில் பிசியாக இருந்ததால் கடந்த 8-வது சீசனில் நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழக்கத் தொடங்கினார்.




பிக்பாஸ் தமிழ் 9 சீசன் எப்போது ஒளிபரப்பாகும்?
இந்த நிலையில் தற்போது 9-வது சீசனையும் நடிகர் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த 9-வது சீசனுக்கான ஆடிசன் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக பலர் தங்களது விவரங்களை பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவிற்கு அனுப்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது தொகுப்பாளராக உள்ள நிலையில் மற்ற தென்னிந்திய மொழிகளான மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும், தெலுங்கு சினிமாவில் நடிகர் நாகர்ஜுனாவும், கன்னட சினிமாவில் சுதீப் கிஷன் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
Also Read… ஹே மின்னலே… இணையத்தில் கவனம் பெறும் சாய் பல்லவியின் இன்ஸ்டா போஸ்ட்!
9-வது சீசனில் புது மாற்றம் இருக்குமா?
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 7 சீசன்களும் ஒரே மாதிரியான பேட்டன்களின் இருந்தது. ஆனால் 8-வது சீசன் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல முற்றிலும் வேறுபட்டு இருந்தது. இது ரசிகர்களுக்கு மிகவும் சர்ப்ரைஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மாதிரி இந்த 9-வது சீசனில் ரசிகரக்ளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக புதிய மாற்றங்கள் எதுவும் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் யார் எல்லாம் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது என்று முன்பே இணையத்தில் ரசிகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Kani – cwc
Pavithra – cwc
Irfan – kanakanum kalangal
Vinod Babu – serial actor
Aryan – Serial ActorThese 5 are Expected to be part of Biggboss Season 9 Tamil#biggbosstamil #biggbosstamil9
— BB Darbar (@bb_darbar) July 18, 2025
Also Read… ஸ்கூல் கட்டடித்துவிட்டு நான் தியேட்டரில் பார்த்த முதல் தமிழ் படம் – ஃபகத் பாசில் ஓபன் டாக்