கூலி படத்தில் ரஜினி சாரை வில்லனாக நடிக்க வைப்பதே முதல் ப்ளான் – லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம்
Lokesh Kanagaraj: நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளை தெறிக்கவிட தயாராகி வரும் படம் கூலி. இந்தப் படத்தில் முதலில் நடிகர் ரஜினிகாந்தை வில்லனாக நடிக்க வைத்து மற்றொரு நடிகரை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்து இருந்ததாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வேட்டையன் படத்தை தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆன படம் கூலி. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கி வருகிறார். இவர் முன்னதாக கைதி, விக்ரம் மற்றும் லியோ என மாஸ் நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவ்வபோது பேட்டிகளில் கலந்துகொள்ளும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் குறித்தும் கூலி படதின் தற்போதையை நிலை குறித்தும் அப்டேட்களை தொடர்ந்து வழக்கி வருகிறார்.
அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதன்படி கூலி படம் தற்போது இருக்கும் கதையில் தொடங்கவில்லை என்றும் இது நடிகர் ரஜினிகாந்திற்காக மாற்றி அமைக்கப்பட்டது என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.




கூலி படத்தில் வில்லனாக ரஜினி ஹீரோவாக மற்றொரு நடிகர்:
அதன்படி லோகேஷ் கனகராஜ் அந்த பேட்டியில் பேசியபோது கூலி படத்திற்கு முதலில் கதை எப்படி இருந்தது என்றால் நடிகர் ரஜினி சாரை வில்லனாகவும் மற்றொரு நடிகரை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்பது போலவே கதை அமைக்கப்பட்டு இருந்தது. அதனை ரஜினி சாரிடமும் சொல்லிவிட்டேன்.
ஆனால் ரஜினி சாரின் தற்போதை மதிப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. அதனால் ரஜினி சாரிடம் சென்று கதையை மாற்றி அமைத்துவிட்டு வந்து சொல்கிறேன் என்று மாற்றிவிட்டு அவரை சந்தித்து பேசினேன். அந்த கதையைதான் தற்போது படமாக்கி உள்ளோம் என்றும் லோகேஷ் கனகராஜ் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
Also read… அரசியலில் களமிறங்குவது குறித்து விஜய் சொன்ன விசயம்… நடிகர் ஷாம் ஓபன் டாக்!
இணையத்தில் கவனம் பெறும் லோகேஷ் கனகராஜின் பேச்சு:
“Script i wrote for #Rajinikanth sir before #Coolie, was he will be doing VILLAIN role & other actor will be Hero😲. It’s a huge Fantasy film, which requires artists & 2 yrs pre production. I don’t want to waste Rajini sir’s peak time🤝”
– #LokeshKanagarajpic.twitter.com/pm3fhtSSqq— AmuthaBharathi (@CinemaWithAB) July 24, 2025
Also read… இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட்ஸ் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!