Coolie : ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் கமல்ஹாசன்.. அவர் செய்யும் முக்கிய விஷயம்?
Coolie Movie Update : நடிகர் ரஜினிகாந்த் 171வது திரைப்படமாக ரிலீசிற்கு காத்திருப்பது கூலி. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில், நடிகர் கமல்ஹாசன் முக்கிய பணி ஈடுபட்டு இருக்கிறாராம். இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி கமல்ஹாசன் என்ன செய்துள்ளார் என்பதை பற்றி விவரமாக பார்க்கலாம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்திருக்கும் படம் கூலி (Coolie). இந்த படத்தில் ரஜினிகாந்த் சிங்கிள் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமானது கேங்ஸ்டர்ஸ் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடிக்க அவருடன் நடிகர்கள், நாகார்ஜுனா (Nagarjuna) , அமீர்கான் (Aamir Khan), ஸ்ருதி ஹாசன், உபேந்திரா மற்றும் சத்யராஜ் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தப் படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan), கூலி படத்தில் முக்கியமான வேலையைச் செய்துள்ளாராம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒருவருக்கு, கமல்ஹாசன் டப்பிங் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் எனத் தெரியவில்லை.




இதையும் படிங்க : குடும்பஸ்தன் படத்தில் முதலில் அந்த நடிகர்தான் நடிக்க வேண்டியது – நடிகர் மணிகண்டன் ஓபன் டாக்
கூலி திரைப்படத்தின் 3 பாடல் ரிலீஸ் பதிவு :
Arangam Adhirattume.. Whistle Parakkatume…😎#Coolie Third Single #PowerHouse releasing Today! 🔥#Coolie worldwide from August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @Arivubeing #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan… pic.twitter.com/joJ7oYsM2U
— Sun Pictures (@sunpictures) July 22, 2025
கூலி திரைப்படத்தின் மொத்த ரிலீஸ் விநியோக கலெக்ஷன் :
இந்த கூலி திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படமானது மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த இந்தியா அளவிற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படமானது ரிலீசிற்கு முன்னே, ரிலீஸ் விநியோக வியாபாரத்தில் சுமார் ரூ. 245 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் இப்படமானது அதிக தொகைக்கு விற்பனையானதாகக் கூறப்படுகிறது. இந்த கூலி படத்தில் பான் இந்தியா பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் நிலையில், மிகப் பிரம்மாண்ட கதைக்களம் கொண்டப்படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் இணைந்த பாகுபலி நடிகர் – வைரலாகும் வீடியோ
கதைக்களம் :
ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் கதைக்களமானது முழுமையாக கேங்ஸ்டர்ஸ் மற்றும் கடத்தல் தொடர்பான கதையுடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படமானது தங்க வாட்ச் கடத்தலில் ஈடுபடும் கேங்ஸ்டர்ஸ்களுக்கு இடையே இருக்கும் மோதல் போன்ற கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.