சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் இணைந்த பாகுபலி நடிகர் – வைரலாகும் வீடியோ
Parasakthi Movie Update: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான அமரன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் மதராஸி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் பராசக்தி படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் (Actor Sivakarthikeyan) நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைப்பெற்று வரும் படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25-வது படமான இதனை இயக்குநர் சுதா கொங்கரா (Director Sudha Kongara) இயக்கி வருகிறார். இவர் முன்னதாக இறுதிச் சுற்று, சூரரைப் போற்று ஆகிய ஹிட் படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, தேவ் இராம்நாத், பிருத்திவி ராஜன், குரு சோமசுந்தரம், பேசில் ஜோசப், ரஞ்சன் ராமநாயக்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. அப்படி சமீபத்தில் பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த வீடியோ மூலம் படத்தில் பிரபல நடிகர் இணைந்து இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் பரசாக்தி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவில் ஸ்ரீ லீலா படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ரசிகர்களை சந்தித்துவிட்டு காரில் ஏறி செல்கிறார். அவரைத் தொடர்ந்து நடிகர் ராணா டகுபதி அந்தப் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் ராணா டகுபதி பராசக்தி படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே பரவி வருகின்றது.




இணையத்தில் வைரலாகும் பராசக்தி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ:
RanaDaggubati from the sets of #Parasakthi 👀🔥
He plays a pivotal role in the film❓pic.twitter.com/hF4AzPP7Ko— AmuthaBharathi (@CinemaWithAB) July 22, 2025
Also read… கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ஹம்சினி என்டர்டெயின்மென்ட்!
விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் பராசக்தி படத்தின் ஷூட்டிங்:
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் மதராஸி. செப்டம்பர் மாதம் இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பராசக்தி. இந்தப் படம் அடுத்த 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வரும் நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இவர் முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்திற்கும் இசையமைத்து இருந்தார். அந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Also read… மாரீசன் VS தலைவன் தலைவி… ஜூலை 25-ம் தேதி எந்த படத்தை முதலில் பார்ப்பீங்க?