அரசியலில் களமிறங்குவது குறித்து விஜய் சொன்ன விசயம்… நடிகர் ஷாம் ஓபன் டாக்!
Actor Shaam About Vijay Politics: கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தற்போது நடிப்பதில் இருந்து விலகி முழு நேர அரசியல் பணியில் ஈடுபடுவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் ஷாமிடம் நடிகர் விஜய் சொன்ன விசயம் தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் (Actor Vijay) கோலிவுட் சினிமாவில் (Kollywood Cinema) உச்சத்தில் அதிக சம்பளம் பெரும் நடிகராக இருக்கிறார். இப்படி தனது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் அவர் இதனை எல்லாம் விட்டுவிட்டு முழு நேரமாக அரசியலில் களம் இறங்கி தன்னை இவ்வளவு பெரிய நடிகராக மாற்றிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதுகுறித்தும் நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்தும் அவருடன் நடித்த சக நடிகர்கள் உட்பட பலர் தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதில் பலர் விஜயின் முடிவை பாராட்டி அவரது இந்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்றும் வாழ்த்தி வருகின்றனர். சிலர் தங்களது விமர்சனங்களையும் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜயுடன் வாரிசு போன்ற படங்களில் இணைந்து நடித்த நடிகர் ஷாம் விஜயின் அரசியல் பயணம் குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடுவது குறித்து தன்னிடம் என்ன சொன்னார் என்றும் நடிகர் ஷாம் வெளிப்படையாக பேசியுள்ளார்.




அரசியல் குறித்து நடிகர் ஷாமிடம் விஜய் சொன்ன விசயம் என்ன?
வாரிசு படத்தில் நடிகர் விஜயின் இரண்டாவது அண்ணனாக நடித்தவர் நடிகர் ஷாம். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயின் அரசியல் வருகை குறித்து அவரிடம் கேட்டதாக தெரிவித்துள்ளார். அதில் ஷாம் பேசியதாவது, ஏன் அண்ணா இவ்வளவு பெரிய சம்பளம் சினிமால இப்படி உச்சத்தில இருக்கும் போது ஏன் இந்த முடிவு என்று கேட்டேன்.
அதற்கு விஜய் அண்ணா சொன்னாறு, இல்லடா ஷாம் இந்த மக்கள் தான் என்ன இவ்வளவு பெரிய நடிகனா மாத்துனாங்க. நான் இந்த இடத்தில இருக்கதுக்கு இவங்கதான் காரணம். எனக்கு இது போதும் இனி நான் அவங்களுக்காக எதாவது பன்னனும். அதான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன் என்று விஜய் தன்னிடம் கூறியதாக நடிகர் ஷாம் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also read… மேரா பாய் இது நம்ம டைம்… அதிரடியான காட்சிகளுடன் வெளியானது கருப்பு படத்தின் டீசர்!
இணையத்தில் வைரலாகும் நடிகர் ஷாம் பேசிய வீடியோ:
View this post on Instagram
Also read… நான் வீட்டில் துன்புறுத்தப்படுகிறேன்… விஷால் பட நடிகையின் வைரல் வீடியோ!