நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியான மாதவனின் ஆப் ஜெய்சா கோய் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Aap Jaisa Koi Movie Review: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மாதவன் தற்போது இந்தி சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் மாதவன் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஆப் ஜெய்சா கோய் என்ற படம் வெளியானது.

நடிகர் மாதவன் (Actor Madhavan) தற்போது இந்தி சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் நாயகனாக நடித்து வெளியான படம் ஆப் ஜெய்சா கோய். இந்தப் படத்தை இயக்குநர் விவேக் சோனி இயக்கி இருந்தார். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்காக கரண் ஜோஹரின் தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. நேரடியாக நெட்ஃபிளிக்ஸ்டில் (Netflix OTT) வெளியான இந்தப் படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிகை பாத்திமா சனா ஷேக் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மணீஷ் சவுத்ரி, ஆயிஷா ராசா, நமித் தாஸ், கரண் வாஹி, சாஹேப் சட்டர்ஜி, அனன்யா சாட்டர்ஜி, திவ்யம் துபே, பீனா பானர்ஜி, சஞ்சீவ் வில்சன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்கள் ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் ரோசக் கோஹ்லி ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்து இருந்த நிலையில் படம் கடந்த 11-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.




மாதவனின் ஆப் ஜெய்சா கோய் படத்தின் கதை என்ன?
ஜம்ஷத்பூரில் கல்லூரி ஒன்றில் சமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றி வருகிறார் ஸ்ரீ ரேணு (மாதவன்). 40 வயதைக் கடந்த இவருக்கு திருமணத்திற்கு பெண் தேடி வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் ஸ்ரீரேணுவின் அண்ணியின் மூலமாக 32 வயதை உடைய மது போஸ் (பாத்திமா சனா ஷேக்) என்ற பெண்ணின் சம்மந்தம் கிடைக்கிறது. மது போஸ் கொல்கத்தாவில் ஃப்ரெஞ்ச் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மதுபோஸை பார்க்க கொல்கத்தா வரும் ஸ்ரீரேணுவிற்கு பெண்ணை பார்த்ததுமே பிடித்துவிடுகிறது. இவர்கள் இருவருக்கும் பிடித்துபோக இரண்டு குடும்பங்களும் இணைந்து திருமண நிச்சயத்தை நடத்தி வைக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தம் எதிர்பாராத சூழலால் பிரிவை சந்திக்கிறது.
Also Read.. புதிய தொழில் தொடங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா… வைரலாகும் பதிவு
ஆப் ஜெய்சா கோய் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
https://t.co/k5nsYx5doL
The ONE SONG I HAVE BEEN WAITING FOR .. FOR YOU TO LISTEN AND GET ADDICTED LIKE ME ❤️❤️‼️‼️.. do listen to it and let me know if I am right.. @aapjaisakoi @sonymusicindia @DharmaticEnt …. https://t.co/y8t3V66geK pic.twitter.com/caG7NGVV0E— Ranganathan Madhavan (@ActorMadhavan) June 18, 2025
ஸ்ரீ ரேணு பயன்படுத்திய டேட்டிங் ஆப்பை மதுபோஸ் பயன்படுத்தியது குறித்து வெளிப்படையாக கூறவில்லை என்று அந்த திருமணத்தை ஸ்ரீரேணு நிறுத்திவிடுகிறார். இதனைத் தொடர்ந்து என்ன நடந்தது அவர்கள் இருவரும் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை.
இந்திய சினிமாவின் வழக்கமான ஆண் ஆதிக்கம், பெண் அடிமைதனம் போன்ற கான்செப்டுகளை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது.
Also Read… சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் இணைந்த பாகுபலி நடிகர் – வைரலாகும் வீடியோ