நான் வீட்டில் துன்புறுத்தப்படுகிறேன்… விஷால் பட நடிகையின் வைரல் வீடியோ!
Tanushree Dutta : இந்தி திரையுலகில் பல படங்களில் நடித்த நடிகை தனுஸ்ரீ தத்தா விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இவர் தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளம் மூலமாகவும் மீ டூ பிரச்னை மூலமாகவும் பிரபலம் ஆனார்.

பாலிவுட் சினிமாவில் ஆஷிக் பனாயா ஆப்னே (Aashiq Banaya Aapne) என்ற படத்தின் மூலம் கடந்த 2005-ம் ஆண்டு நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகர் தனுஸ்ரீ தத்தா (Tanushree Dutta). அதனைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வந்தார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். மூன்று நாயகிகளில் ஒருவராக இவர் நடித்து இருந்தாலும் இவரது கதாப்பாத்திரம் மக்கள் மனதில் பதியும் அளவிற்கு மிகவும் ஸ்ட்ராங்காக இருந்தது என்றே சொல்லாம். அதனை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் பின்பு தமிழில் நடிக்கவில்லை. தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகை தனுஸ்ரீ தத்தா திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் குறித்து வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மீ டூ இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட நடிகை தனுஸ்ரீ தத்தா:
இந்தியா முழுவதும் திரைத்துறையில் உள்ள பெண்கள் மீ டூ என்ற ஹேஷ்டாக் மூலம் தங்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்பட்ட வன்கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசினர். இதில் நடிகை தனுஸ்ரீ தத்தா ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்த நானா பட்டேகர் தன்னுடன் நடிக்கும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டினார்.




இது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல படங்களில் நடித்த மூத்த நடிகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மீ டூ புகார் கூறியபிறகு அவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நானா பட்டேகர் மீது வழக்கு தொடர்ந்து அதனை நடத்தி வந்தார் நடிகை தனுஸ்ரீ தத்தா.
வீட்டில் உள்ளவர்கள் துன்புறுத்துவதாக நடிகை தனுஸ்ரீ வெளியிட்ட பதிவு:
இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் உள்ளவர்கள் தன்னை துன்புறுத்துவதாக அழுதுகொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று என்ன பிரச்சனை என்று புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இது குறித்தும் நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் சமந்தா? அவரே தயாரிக்கவும் செய்கிறாரா – வைரலாகும் தகவல்!
இணையத்தில் வைரலாகும் நடிகை தனுஸ்ரீ தத்தாவின் வீடியோ:
View this post on Instagram
Also Read… நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியான மாதவனின் ஆப் ஜெய்சா கோய் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!