ரிலீஸிற்கு முன்பே வெளீட்டு உரிமையில் லாபம் பார்க்கும் பைசன் காளமாடன்!
Bison Kaalamaadan Movie: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் பைசன் காளமாடன். படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே வெளியீட்டு உரிமையின் மூலம் லாபத்தைப் பெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

நடிகர் துருவ் விக்ரம் (Actor Dhruv Vikram) நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj) இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். இவர் முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் இவர்கள் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக முன்னணி நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்து வருகிறார்.
படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாக வெளியீட்டு உரிமையின் விற்பனை மூலம் லாபத்தை ஈட்டி வருகின்றது.




வெளியீட்டு உரிமையில் லாபம் பார்க்கும் பைசன் காளமாடன் படம்:
பைசன் காலமாடன் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே அதன் வெளியீட்டு உரிமையில் விற்பனை மூலம் பல மடங்கு லாபத்தை சம்பாதித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. அதன்படி தமிழ் நாட்டில் இந்தப் படத்தை பிரபல ஃபைவ் ஸ்டார் நிறுவனம் வெளியிட உள்ளதாக முன்னதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்து இருந்தது.
அதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமை விற்பனை படு ஜோராக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி பைசன் காளமாடன் படம் இதுவரை வெளியீட்டு உரிமை விற்பனையில் மட்டும் சுமார் 40 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுவிட்டதாகவும் படம் திரையரங்குகளில் வெளியானால் சுமார் 100 கோடிக்கு அதிகமாக வசூலிக்க வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
Also read… தியேட்டரில் ஹிட் அடித்த பறந்து போ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்!
தமிழ் நட்டில் பைசன் காளமாடன் படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற பைவ் ஸ்டார் நிறுவனம்:
The Legacy of our #BisonKaalamaadan will resonate across Tamilnadu through @5starsenthilk 💥#BisonKaalamaadanFromDiwali #BisonKaalamaadanOnOct17 🎆#BisonKaalamaadan 🦬 💥 @applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @beemji @Tisaditi #DhruvVikram @anupamahere… pic.twitter.com/2jytpTwF0y
— Mari Selvaraj (@mari_selvaraj) July 18, 2025