Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Coolie : ரஜினிகாந்த்தின் கூலி.. 3வது பாடலான ‘Power House’ வெளியீடு!

Coolie Power House Song : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பிலிருந்து, கூலி திரைப்படத்தின் மூன்றாவது பாடலான Power House வெளியாகியுள்ளது. தற்போது இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Coolie : ரஜினிகாந்த்தின் கூலி.. 3வது பாடலான ‘Power House’ வெளியீடு!
கூலி திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jul 2025 19:04 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், தளபதி விஜய்யின் லியோ (leo) படத்தை அடுத்தாக, இப்படமானது தலைவர் 171 என்று இப்படம் அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் முன்னணி கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் நிலையில், இவருடன் முக்கிய வேடத்தில் பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது பான் இந்திய மொழிகளிலும் வெளியாகுவதற்குத் தயாராகியுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையமைப்பில், இப்படத்திலிருந்து சிக்கிட்டு வைப் மற்றும் மோனிகா (Monica) என இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை அடுத்ததாக இப்படத்தின் மூன்றாவது பாடலான “பவர் ஹவுஸ்” (Power House) என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலானது மியூசிக் ஊடகங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முதல் நாளில் ரூ.100 கோடி வசூலிக்குமா ரஜினிகாந்த்தின் கூலி? சன் பிக்சர்ஸ் சூப்பர் திட்டம்!

கூலி படக்குழு வெளியிட்ட 3வது பாடலான Power House பதிவு :

கூலி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் :

இந்த கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன், நடிகர்கள் நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திர ராவ், சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் போன்ற முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தைத் திரையரங்கு ரிலீசிற்கு பின் 8 வாரங்களுக்கு அடுத்து ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தைகளை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 8 வாரங்களுக்குப் பிறகு இப்படம் ஓடிடியில் 2025 அக்டோபர் மாதத்தின் 2 வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? குஷியில் ரசிகர்கள்!

கூலி பட கதை இணையத்தில் கசிவு :

நடிகர் ரஜினிகாந்தின் இந்த படமானது சுமார் ரூ 400 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் பான் இந்திய நடிகர்கள் இணைந்திருக்கும் நிலையில், விஜயமாக சுமார் ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டில் தமிழில் அதிகம் வசூல் செய்த படமாக இந்த கூலி அமையும் என் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.