Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kingdom : விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? குஷியில் ரசிகர்கள்!

Kingdom Movie Trailer Release Update : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் விஜய் தேவரகொண்டா. இவரின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் கிங்டம். இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kingdom : விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? குஷியில் ரசிகர்கள்!
கிங்டம் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jul 2025 17:58 PM

நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பேமிலி ஸ்டார் (Family Star). இந்த படத்தில் நடிகை மிருனாள் தாகூருடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்தாக இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் கிங்டம் (Kingdom). தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னனுரி (Gowtam Tinnanuri) இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, சூரி என்ற இரகசிய போலீஸ் ஏஜெண்டாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சென்சேஷனல் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் Bhagyashri Borse) நடித்துள்ளார்.

இந்த படமானது வரும் 2025, ஜூலை 31ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீசிற்கு சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படக்குழு ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2025, ஜூலை 26ம் தேதியில் வெளியாகும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : விவகாரத்திற்கு பிறகு மேடையில் இணைந்துப் பாடிய ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி!

கிங்டம் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு பதிவு :

கிங்டம் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி :

இந்த கிங்டம் படத்தில் முன்னணி வேடத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சத்யதேவ் மற்றும் கவுஷிக் மஹத் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷ்ன் படமாக இப்படம் உருவாகியிருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியானது வரும் 2025, ஜூலை 26ம் தேதியில் திருப்பதியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியுடன்தான் இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் இணைந்த பாகுபலி நடிகர் – வைரலாகும் வீடியோ

இந்த கிங்டம் படத்தை சூர்யாவின் 46வது படத்தைத் தயாரித்துவரும், சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்குத் தமிழ் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படமானது அதிரடி காதல், ஆக்ஷ்ன் மற்றும் க்ரைம் திரில்லர் போன்ற கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படமானது ஆரம்பத்தில் 2025 ஜூன் மாதத்தில் வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அதை அடுத்தாக மீண்டும் படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தது. அதன்படி இப்படம் வரும் 2025, ஜூலை 31ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது