Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GV Prakash Kumar : விவகாரத்திற்கு பிறகு மேடையில் இணைந்துப் பாடிய ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி!

GV Prakash Kumar And Saindhavi Post-Divorce Collaboration : தமிழில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரும் பாடகி சைந்தவியும், விவாகரத்திற்குப் பிறகு சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த யாழை என்ற நிகழ்ச்சியில் பாடியுள்ளனர். இந்த பாடலானது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

GV Prakash Kumar : விவகாரத்திற்கு பிறகு மேடையில் இணைந்துப் பாடிய ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி!
ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jul 2025 16:25 PM

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV Prakash Kumar), தனது சிறு வயதில் இருந்து இசைத் துறையிலிருந்து வருகிறார். இசையமைப்பாளராக மக்களின் மனதை வென்ற இவர், தற்போது படங்களில் முன்னணி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை 25 படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், நடிகராகவும் தனது வாழ்க்கையைத் தொடர்ந்து வருகிறார். இவரின் முன்னாள் மனைவிதான் பாடகி சைந்தவி ( Saindhavi). இவர்கள் இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்து காதலித்து, பின் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் அழகான பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த ஜோடியானது மனக்கசப்பின் காரணமாகக் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து (Divorce) பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்திற்கு பிறகும், இணைந்து நிகழ்ச்சி மேடையில் இணைந்து பாடல்களைப் பாடிவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் (N. Muthukumar) 50வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவர்கள் இணைந்து பாடியுள்ளனர். விஜய்யின் (Vijay) தலைவா (Thalaivaa) படத்தில் இடம்பெற்றிருக்கும், “யார் இந்த சாலையோரம் பூக்களை வைத்தது” என்ற பாடலை ஜிவி. பிரகாஷ் இசையமைக்க, சைந்தவியுடன் இணைந்து பாடியிருந்தார். இந்த பாடல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : கணவருடன் மனக்கசப்பு? – ஹன்சிகா விவாகரத்து செய்யவுள்ளதாக பரவும் தகவல்

ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவியின் ட்ரென்டிங் பாடல் வீடியோ :

இந்த வீடியோவில் இசையமைப்பாளர் ஜி.வி . பிரகாஷும், பாடகி சைந்தவியும் இணைந்து பாடியிருக்கின்றனர். இப்பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தவாறு பாடியிருந்தார். இவர்கள் இணைந்து பாடியிருக்கும் இப்பாடலானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் விவாகரத்திற்கு பிறகும் இந்த ஜோடி இணைந்து பல்வேறு நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஹரிஸ் கல்யாண் எடுத்த ரிஸ்க் .. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன விஷயம்!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் புதிய படங்கள் :

இறுதியாக வெளியான கிங்ஸ்டன் படத்தை அடுத்தாக ஜிவி. பிரகாஷ், இடிமுழக்கம், பிளாக்மைல், மற்றும் 13 போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. மேலும் இப்படங்கள் ரிலீசிற்கு தயாராகிவரும் நிலையில், இதை அடுத்ததாக இமார்ட்டல், மெண்டல் மனதில் போன்ற திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.